தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு: எண்: 14/2020 நாள்: 16.02.2020
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தனது 12.02.2020 நாளிட்ட செய்தி வெளியீட்டு எண் 12/2020 ல், தொகுதி 4 தேர்வுக்கு தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது சான்றிதழ் நகல்களை 13.02.2020 முதல் 18.02.2020 க்குள் தேர்வாணைய இணைய தளத்தில், அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்த செய்தி வெளியீடானது சில தேர்வர்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, ஏற்கனவே இத்தேர்வுக்கென தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களும் மீண்டும் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து கீழ்கண்ட விளக்கம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே 05.12.2019 முதல் 18.12.2019 வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்த தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் தகுதியான தேர்வர்கள் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் 12.02.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது, கலந்தாய்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் யாரும் தங்களது சான்றிதழை மீண்டும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.
அவர்கள் கலந்தாய்வுக்கு வரும்போது தங்களது மூலச் சான்றிதழ்களை கொண்டுவந்தால் போதுமானதாகும். தற்போது கூடுதலாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 27 தேர்வர்கள் மட்டும் தங்களது சான்றிதழ்களின் நகல்களை இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்தால் போதுமானது.
தற்போது சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய 27 தேர்வர்களின் பதிவெண்கள் 12.02.2020 அன்று வெளியிடப்பட்ட கலந்தாய்வுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியலின் கீழே 47 வது பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன
No comments:
Post a Comment