சிவகங்கை மாவட்டத்தில் 70 செ.மீ. உயரமுள்ள மாற்றுத்திறனாளி மாணவர் உட்பட 15,498 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
தேவகோட்டை கல்வி மாவட் டத்தில் 6,935 மாணவர்களில் 6,725 பேர் தேர்வு எழுதினர். 210 பேர் வரவில்லை. திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 3,535 பேரில் 3,296 பேர் தேர்வு எழுதினர். 239 பேர் வரவில்லை. சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 5,833 பேரில் 5,477 பேர் தேர்வு எழுதினர். 356 பேர் வரவில்லை.
சிவகங்கை வருவாய் மாவட் டத்தில் 73 மையங்களில் 16,303 மாணவர்களில் 15,498 பேர் தேர்வு எழுதினர். 805 பேர் வர வில்லை. காரைக்குடி அருகே பீர்க்கலைக்காட்டைச் சேர்ந்த மாரிமுத்து, 70 செ.மீ. உயரமே உடைய மாற்றுத்திறனாளி.
இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். தேர்வு எழுத சிரமப்பட்ட அவருக்கு உதவியாக ஆசிரியர் நியமிக்கப்பட்டு, கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.
தேர்வைக் கண்காணிக்க கல்வி துறை இணை இயக்குநர் நரேஷ், முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து உள்ளிட்டோர் தலை மையில் 8 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆட்சியர் ஜெயகாந்தன் சிவகங்கை மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை பார்வையிட்டார்.
This comment has been removed by the author.
ReplyDelete