தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டங்களைப் பார்த்து பல மாநிலங்களும் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தை விட சிறப்பாக அந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றன. இது அந்த மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தில் பல்வேறு வகையான சுவைமிகுந்த சாப்பாடுடன் கறி, பாயாசம் போன்றவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன… இதுபள்ளி மாணவர்கள் மத்தியிலும்,பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஏழை எளிய மக்களும் கல்வி கற்கும் நோக்கில் அவர்களை பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில், முதன்முதலாக அவரது ஆட்சியின்போது மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டம் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மெருகூட்டப்பட்டு சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி, குழந்தைகளுக்கு தினசரி முட்டை வழங்க உத்தரவிட்டார். பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மதிய உணவு தினசரி ஒவ்வொரு வகையான சாதங்களாக போட உத்தரவிட்டார்.
ஆனால்,கேரள அரசு பள்ளிக்குழந்தைகளுக்கு விதவிதமான சத்துமிக்க உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது…. படிக்கும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளரத் தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒருநாள் தேங்காய் சாதம், மற்றொரு நாள் வேறு வகையான சாதம் உள்பட காய்கறி சாலட், அத்துடன் சிக்கன் கறி மற்றும் பால் பாயாசம் போன்றவைகளும் வழங்கப்படுகின்றன. இது பள்ளிக் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது…
No comments:
Post a Comment