கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரி பேராசிரியர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் வூஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸல் உலகம் முழுவதும் இதுவரை 9000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸல் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதையடுத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்க பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது தவிர, பல்கலைக்கழகத் தேர்வுகளையும் யுஜிசி ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கும் கல்வி நிறுவனங்களை மூடவும், அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் முழுதும் மத்திய அரசின் கீழ் வரும் கல்லூரி, சிபிஎஸ்சி பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மத்திய அரசின் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment