06/03/2020 - இடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முப்பெரும் விழா இனிதே நடைபெற்றது.... முதல் விழா
01.குழந்தைகள்
பள்ளி பிரவேசம்......
வீட்டில் நடக்கும் விசேஷங்களில் முக்கியமான விசேஷம் கிரகப்பிரவேசம் தான்..வாழ்க்கையில் சொந்தமாக வீடு வாங்கவேண்டும் என்பது எல்லோருடைய கனவு.சிறுக சிறுக சேர்த்து வீட்டைக்கட்டி...
நல்ல நாள் நேரம் பார்த்து குடியேற கிரகப்பிரவேசம் செய்வர்.. அதுபோல தன் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து குழந்தைகளின் கனவை நிறைவேற்றுவது பெற்றோர்களின் கடமை..ஆனால் வீடுபிரவேசத்திற்கு பணம்வேண்டும்...ஆனால் பள்ளி பிரவேசத்திற்குஒரு ரூபாய் செலவில்லாமல் முதல் முதலாக பள்ளிக்குள் பிரவேசம் செய்யும் அவர்களை இந்த ஆண்டு மாலை போட்டு ஐந்து ரதங்களில் அவர்களை ஏற்றி பேண்டு வாத்தியங்கள் முழங்க இடமலைப்பட்டிப்புதூர்மெயின் ரோட்டில் இருந்து அவர்களை அழைத்து வந்து பள்ளியின் நுழைவாயிலில் ஆரத்தி எடுத்துசந்தனம் குங்குமம் இட்டு அவர்களை மேடையில் ஏற்றிய அழகு ..ஆகா..
ஆகா..காண கண் கோடி வேண்டும்....அரசுப்பள்ளியா?
இல்லவே இல்லை
....அதிரவைக்கும் பள்ளி....என பார்ப்பவர்களை வியக்க வைத்தது ....ரதத்தில்( மாப்பிள்ளை அழைப்பு கார்) ஏறிவந்த குழந்தைகளின் ஊர்வலம்....அழகோ...அழகு
இதுவரை 80 முதல் வகுப்பில் பள்ளியில் சேர்ந்தனர்....80குழந்தைகள் LKG UKG வகுப்புகளுக்கு பிரவேசம் செய்துள்ளனர்..
மாப்பிள்ளை அழைப்பு காரில் மாலைகளுடன் மழலைகள் அமர்ந்திருந்த காட்சி அருமையிலும் அருமை...விழா சிறக்க ஒத்துழைத்த வட்டாரக்கல்வி அலுவலர் ஐயா,திரு சிவக்குமார் ஐயா...ஓடிக்கொண்டேக்ஷ இருக்கும் என் பள்ளியின் ஆசிரியர்கள்...கல்விக்குழுத்தலைவர் ,பெற்றோர் ஆசிரியர்சங்கத் தலைவர்..பெற்றோர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த
நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.... அனைவருக்கும் நன்றி....நன்றி
No comments:
Post a Comment