மக்கள் அதிக அளவில் ஒன்றாக கூடும் இடங்களில் கூடுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அனைத்து மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த நிலையில், தமிழகத்தில் எவ்வித விடுமுறையும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை அளித்தும், கேரளாவை ஒட்டியுள்ள குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி தென்காசி மாவட்டங்களில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் LKG, UKG வகுப்புகளுக்கும், கேரளாவை ஒட்டியுள்ள தேனி,கோவை, திருப்பூர்,நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு 5ஆம் வகுப்பு வரைக்கும் கொரோனா வைரஸ் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 முதல் மார்ச் 31 வரை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
No comments:
Post a Comment