எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஊரடங்கை மே.3-க்கு பின்னரும் நீட்டிக்க 5 மாநிலங்கள் முடிவு?நாளை (ஏப்.27) நடக்க உள்ள மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமரிடம் வலியுறுத்த உள்ளதாக திட்டம்!

Sunday, April 26, 2020




மே. 3-க்கும் பின்னரும் மேலும் ஊரடங்கை நீட்டிக்க 5 மாநிலங்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மே.3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கால வரும் மே.3ல் நிறைவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 5 மாநிலங்கள் மே. 3க்கு பின்னரும் ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துளளதாக தகவல் வெளியாகியுள்ளது.டில்லி, மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா ஆகிய 5 மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அங்கு ஊரடங்கை மே.16 வரை நீட்டிக்கலாம் என நாளை (ஏப்.27) நடக்க உள்ள மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமரிடம் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றவும் முடிவு செய்துள்ளன.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One