கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு மே. 3 வரை ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் முறையாக நாளை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன், கடந்த ஏப். 2 மற்றும் 11-ம் தேதி என இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். மாநில முதல்வர்களுடன் நடத்தவுள்ள இந்த ஆலோசனைக்கு பின் ஊரடங்கை தளர்த்துவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. ஊரடங்கு முடிய இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தவும், கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியில் ஊரடங்கை நீட்டித்தும் அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுமா?முதல்வர்களுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை
Sunday, April 26, 2020
கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு மே. 3 வரை ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் முறையாக நாளை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன், கடந்த ஏப். 2 மற்றும் 11-ம் தேதி என இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். மாநில முதல்வர்களுடன் நடத்தவுள்ள இந்த ஆலோசனைக்கு பின் ஊரடங்கை தளர்த்துவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. ஊரடங்கு முடிய இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தவும், கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியில் ஊரடங்கை நீட்டித்தும் அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment