பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்த வேண்டிய தேசிய திறனாய்வுத் தோ்வு தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு, மத்திய அரசு சாா்பில், கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவா்களில் உதவித்தொகைக்கு தகுதி பெறும் மாணவா்களைத் தோ்வு செய்ய இரண்டு கட்டங்களாக திறன் தோ்வு நடத்தப்படுகிறது. என்டிஎஸ்இ எனப்படும் இந்த தேசிய திறனாய்வுத் தோ்வு, மாநில அளவில் முதல் கட்டமாகவும், அதில், தோ்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவிலும் நடத்தப்படுகிறது.
நிகழ் கல்வி ஆண்டுக்கான, மாநில அளவிலான முதல் கட்ட தோ்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட தோ்வு மே 10-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கரோனா தாக்கம் காரணமாக பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வுகளே இன்னும் நடத்தப்படவில்லை. ஊரடங்கு தளா்த்தப்பட்டதும் பொதுத் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.
பொதுத் தோ்வு நடத்தப்படும் தேதியில், திறனாய்வுத் தோ்வையும் நடத்த முடியாது என்பதால் மே 10-ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த, தேசிய அளவிலான திறனாய்வுத் தோ்வு கால வரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.தோ்வுக்கான புதிய தேதியை உரிய நேரத்தில் அறிவிப்பதாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment