கடலாடி அருகே கீழச்சாக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கரிசல் ரா.கலைமுருகன். கொரோனா விழிப்புணர்வு கருத்துக்களை எளிய முறையில் தெம்மாங்கு பாடலாக பாடி வருகிறார். அவர் கூறியதாவது:ஐந்து நிமிட குறும்படம் வடிவில் பாடல் எழுதி, சொந்தமாக இசையமைத்தும், நடித்தும் கடந்த ஏப்., மாத இறுதியில் யூடியூப்பில் வீடியோவாக பதிவேற்றம் செய்தது வைரலாகி பாராட்டை பெற்றது.கொரோனா குறித்த விஷயங்களை முழுமையாக இணையதளத்தில் தெரிந்து கொண்டு பாடலை இயற்றியுள்ளேன்.தமிழ்நாடு ஆசிரியர்கள் கலைக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். பிற மாவட்டங்களை சேர்ந்த 25 ஆசிரியர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். கரகம், தேவராட்டம், குரும்பர் ஆட்டம், படுகர் ஆட்டம், சாட்டைக்குச்சியாட்டம் உள்ளிட்ட 14 வகையான நாட்டுப்புற கலைகளில் விழிப்புணர்வு கருத்துக்களுக்கு ஏற்ப நடனமாடி வருகிறோம்.கொரோனாவிற்கு பிறகு தமிழ்நாடு ஆசிரியர்கள் கலைக்குழு மூலம் அரங்கேற்றம் நடத்த உள்ளேன், என்றார்.
"வந்திருச்சு, வந்திருச்சு வைரசு,கொடிய வைரசு, வரும் முன்னே காக்கா விட்டால் போகும் ஆயுசு,1 மீட்டர் தள்ளி நின்னா பாதுகாப்பு, பிறரை உரசிகிட்டு நின்னாக்கா, யாரு பொறுப்பு, உயிருக்கு பொறுப்பு." என்றபடி பாடத் தொடங்கினார்.
பங்காளி சூப்பர்.
ReplyDelete