இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து. இந்த உத்தரவு சில தளர்வுகளுடன் மே 17-ந் தேதி வரை மூன்றாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை தமிழக அரசு தள்ளிவைத்தது. இது தவிர பிளஸ்-1 பொதுத் தேர்வின் இறுதி நாள் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று சந்தேகம் எழுந்தது.
ஆனால் இந்த தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பதில் அளித்தார்.
இருப்பினும், சில கல்வியாளர்கள், கல்வி சார்ந்த அமைப்புகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக சில கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்த குழப்பங்களின் மத்தியில் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.இது குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
10 ஆம் வகுப்பு பொதுத்தோவில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை, பத்தாம் வகுப்பு மாணவர்களின் மனநிலையையும் அரசு பரிசீலனை செய்துள்ளது. தனிமனித இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment