எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்கள் மீதான 17B நடவடிக்கையினை கல்வித்துறை எப்போது வாபஸ் பெறும்?

Thursday, June 25, 2020




ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர் மீதான நடவடிக்கைகள் வாபஸ் பெறப்பட்டு வரும் நிலையில் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை யும் வாபஸ் பெற கல்வித்துறை முன்வர வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் கூட்டமைப்பு ( ஜாக்டோ ஜியோ ) சார்பில் என 2019 ஜன . , 22 முதல் 30 வரை போராட்டம் நடந்தது . இதில் பணிக்கு வராதோர் மீது ஒழுங்கு நடவடிக்கை ( 17 பி குற்றக் குறிப்பாணை ) எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின் பிப் . , 14 ல் பணிக்கு திரும்பினர் . அவர்கள் மீதானநடவடிக்கைவாபஸ் பெறப்படவில்லை. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு , ஓய்வூதிய பலன் பெற முடியவில்லை. கொரோனா தடுப்பு பணிக்காக தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் 13 பேர் மீதான நடவடிக்கையை கலெக்டர் பல்லவி பல்தேவ் திரும்ப பெற உத்தரவிட்டார்.

இது போல் வேறு சில மாவட்டங்களில் கலெக்டர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.சுரேஷ் கூறியதாவது: கலெக்டர்கள் நடவடிக்கையை வரவேற்கிறோம். ஒரே பல கோரிக்கைக்காக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் போராடினோம். தேனி உட்பட பல மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை வருவாய்த்துறை வாபஸ் பெற்றுள்ளது.

அதுபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை வாபஸ் பெற கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நியாயமான பதவி உயர்வு , ஓய்வூதிய பலன்கள் கிடைக்க வழி ஏற்படும் , என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One