இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் , பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை இந்தியாவில் 4 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் , அரசின் செயல்பாடுகளும் சரி வர செயல்பட முடியவில்லை..பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளதால் , வெளியே சென்று பணிகள் செய்ய முடியாமல் , வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர்.
பள்ளி , கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும் , ஒத்தி வைக்கப்பட்டும் வருகிறது. சில மாநிலங்களில் 10 ம் வகுப்பு தேர்வை தள்ளி வைத்துள்ளனர். அதே போல் கல்லூரிகளும் திறக்கப்படாமல் இருப்பதால் செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 15 வரை நடக்க CBSE தேர்வுகள் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் , ஜூலை 1 முதல் 15 வரை நடக்க CBSE இருந்த தேர்வுகள் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வுகள் ரத்து என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment