வாகனத்தின் என்ஜினில் எரிபொருள் எரிந்து புகை வெளிப்படுகிறது. இதில் கரித்துகள், கார்பன் மோனாக்சைடு.
கார்பன்-டை- ஆக்சைடு, நீராவி, சல்பர்-டை-ஆக்ஸைடு, காரியம் முதலியவை கலந்திருக்கும். இவற்றுள் கார்பன் மோனாக்சைடு, காரீயம் தீங்கு விளைவிக்கக் கூடியன. இவை நச்சுத்தன்மை வாய்ந்தவை
வாகனங்கள் வெளியிடும் புகையில், கார்பன் மோனாக்ஸைடின் அளவை கண்டுபிடிப்பதற்காகச் சோதனையிடுகிறார்கள். இதன் மதிப்பு 4.5 ppm அளவுக்கு குறைவாக இருந்தால் என்ஜினை இயக்கலாம் இல்லையென்றால் பழுது பார்க்கப்பட வேண்டும் என எச்சரிப்பார்களாள்.
காரியத்தைத் தவிர்ப்பதற்காக வாகனத்தில் காரியம் கலக்காத எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு என்ஜினில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment