தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், ஏப்ரல், 30 வரை, 68.03 லட்சம் பேர், அரசின் வேலை வாய்ப்புக்காக, பதிவு செய்துள்ளனர்.
இவர்களில், 14.87 லட்சம் பேர், 18 வயதிற்கு உட்பட்ட, பள்ளி மாணவர்கள். 15.97 லட்சம் பேர், 19 முதல், 23 வயது வரை உள்ள, பலதரப்பட்ட கல்லுாரி மாணவர்கள். அரசு பணிக்காக, 24 முதல், 35 வயது வரை காத்திருப்போர், 25.57 லட்சம் பேர். 36 வயதில் இருந்து, 57 வயது வரை உள்ள, முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள், 11.53 லட்சம் பேர். மேலும், 58 வயதிற்கு மேற்பட்டோர், 8,481 பேர்.
மாற்றுத்திறனாளிகளில், 45 ஆயிரத்து, 219 பெண்கள் உட்பட, 1.32 லட்சம் பேர், பதிவு செய்து உள்ளனர்.
முதுகலையில், மருத்துவ பட்டதாரிகள், 725 பேர்; பொறியியல் பட்டதாரிகள், 2.21 லட்சம் பேர், வேளாண் பொறியியல் பட்டதாரிகள், 16 பேர்; கால்நடை மருத்துவர்கள், 198 பேர்; சட்டம் பயின்றவர்கள், 170 பேர்; பட்டதாரி ஆசிரியர்கள், 2.49 லட்சம் பேர், வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment