ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்! -முன்னோர்கள் சொன்ன காரணம்
பொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனைத் தடுக்க அகத்திக்கீரை அருமருந்து.
எனவேதான், ஏகாதசி விரதம் முடிக்கையில் அகத்திக்கீரையைச் சாப்பிடச் சொன்னார்கள். தவிர, அகத்திக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது எனர்ஜி கொடுக்கும்.
No comments:
Post a Comment