பியூட்டேன், புரோபேன் ஆகிய வாயுக்கள் அழுத்தத்தில் திரவமாக்கப்பட்டு சிலிண்டரில் அடைக்கப்படுகிறது. பின் வீட்டு உபயோகத்திற்கும் வணிகப் பயன்பாட்டுக்கும் அனுப்பப்படுகிறது.
சிலிண்டரிலுள்ள திரவ நிலை வாயுவை ரெகுலேட்டரைத் திறந்து எரிக்கும் போது வாயுவாக மாறி வந்து எரிகிறது. இவ்வாயுக்கள் வாசனையற்றவை என்பதால் கசிவு ஏற்படின் நமக்குத் தெரியாமல் ஆபத்தை விளைவிக்கலாம் ஆதலால் இதனுடன் கந்தகம் கலந்து சிலிண்டரில் நிரப்பப்படுகிறது. BUTANE-INDIA என்ற வார்த்தைகளைச் சேர்த்து INDANE என்ற பெயரில் இதனை அரசு வெளியிடுகிறது
LPG என்பது LIQUID PETROLEUM GAS ஆகும். வீட்டு உபயோகத்திற்குப் பயன்படும் இவ்வகை சிலிண்டர் ஒவ்வொன்றிற்கும் அரசு குறிப்பிட்டளவு மானியமாகத் தருவதால் குறைந்த விலையில் நாம் இதனைப் பெறுகிறோம்.
No comments:
Post a Comment