எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News : மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : நீட் தேர்வில் மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று பட்டியலில் முதலிடம்

Thursday, June 28, 2018


சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

 தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக ஜூன் 10ம் தேதி  அறிவிக்கை வெளியிடப்பட்டது. மாணவர்கள் ஜூன் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை  23 அரசு மருத்துவ கல்லூரிகளில் பணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றனர். இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தனர். ஜூன் 19ம் தேதி மாலை வரை 43,935 விண்ணப்பத்தை சமர்பித்திருந்தனர். தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சுமார் 6,500 இடங்கள் உள்ளன.ஜூலை 1ம் தேதி முதல் தேதி முதல்கட்ட  கலந்தாய்வை தொடங்கவும், ஜூலை 2வது வாரத்தில் 2வது கட்ட கலந்தாய்வையும் நடத்தி, செப்டம்பர் 30ம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க மருத்துவகல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.  எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தை தருமபுரி மாணவர் அபிஷேக்கும், 3வது இடத்தை சென்னை மாணவர் பிரவீனும் பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மொத்தம்  25,417 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன என்று கூறினார். மேலும் ஏற்கப்பட்ட விண்ணப்பங்களில் ஆண்கள் 10,473 பேர், பெண்கள் 17,593 பேர் மற்றும் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பொதுப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 28,067 ஆக உள்ளது என்றும் 5% ஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் கூறினார். இதனிடையே ஜூலை 1ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது

ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க TN ATTENDANCE அறிமுகம்!!


State level RPS orientation course 6th social science enrich content slides by experts - Geography

State level RPS orientation course 6th social science enrich content slides by experts - History

போட்டி தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

போட்டி தேர்வுகளின் தற்போதைய நிலவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., என்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

 இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்பட்ட போட்டி தேர்வு முடிவுகளை, விரைவில் வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. புது முயற்சியாக, 2016 மற்றும், 2017ல் நடத்தப்பட்ட தேர்வுகளில், நிலுவையிலுள்ள போட்டி தேர்வுகளின் முடிவுகளை வெளியிடும் தோராய கால அட்டவணை, ஜூன், 4ல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலை குறித்த விபரங்கள், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

பள்ளிகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

.உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் தயாரிப்பிற்கு தடை விதிக்கப்படுகிறது. பால் பாக்கெட், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம்.

 பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் தயாரிப்பு விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.


மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும் போது வெளிப்படும் நச்சுக் காற்றால் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படுவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது.


 இதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.


இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ஆர்.எம்.எஸ்.ஏ(அனைவருக்கும் கல்வி இயக்கம்) திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், திட்ட அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.


 அதில், ‘தமிழக முதல்வரின் உத்தரவுப்படி பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசியெறிப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

 முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC - குரூப்-4 தேர்வு முடிவுகள் ஜுலை இறுதியில் வெளியாகும் என அறிவிப்பு!

கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள்வரும் ஜுலை இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சிஅறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் புதனன்றுவெளியாகியுள்ள அறிவிப்பு வருமாறு:

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும்.

அதேபோல் 2016-ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற க்ரூப்-1 தேர்வு முடிவுகள் இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும்.

அத்துடன் இதுவரை வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள்தொடர்பான விரிவான அட்டவணை, டி.என்.பி.எஸ்.சிஇணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது: தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு!

திருத்தப்பட்ட ஆசிரியர்- மாணவர்கள் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ப கல்லூரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் குறைக்கக்கூடாது என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.


 இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் பெற்ற அமைப்பு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏஐசிடிஇ). இந்த அமைப்பு ஆசிரியர்கள்- மாணவர்கள் தொடர்பான விகிதாசாரங்களை சமீபத்தில் மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டது. 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்த விதியை மாற்றி, 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று அமைத்து உத்தரவு வெளியிட்டது. இந்நிலையில் ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம் மாற்றியமைக்கப்பட்டதன் காரணமாக கல்லூரி நிர்வாகங்கள், ஆசிரியர்களை ஆட்குறைப்பு செய்வதை ஏஐசிடிஇ ஒருபோதும் அனுமதிக்காது. ஏஐசிடிஇயின் கீழ் அங்கீகாரம் பெற்ற எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் இதுதொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. வயது முதிர்வின் காரணமாக ஆசிரியர்கள் ஓய்வு பெறுதல் அல்லது சுயவிருப்பத்தின்பேரில் ராஜினாமா செய்தால் மட்டுமே விகிதாசாரத்தை ஈடு செய்ய வேண்டும்.

வேறு எந்த வகையிலும் ஆட்குறைப்பு செய்து இந்த விகிதாச்சாரத்தை ஈடு செய்யக்கூடாது. ஏஐசிடிஇ அங்கீகரித்த எந்த கல்வி நிறுவனமும் திருத்தியமைக்கப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் காரணமாக ஆசிரியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கை இல்லை என்பதை மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ஏஐசிடிஇ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

CBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்க புதிய நடைமுறை

கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்கும் வகையில் கேள்வித் தாள்களை மின் அஞ்சல் மூலமாக தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

 அண்மையில் நடைபெற்ற சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் 10ம் வகுப்பு மறுதேர்வுகள் அடுத்த மாதம் 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்கும் வகையில் மின் அஞ்சல் மூலமாக கேள்வித் தாள்களை அனுப்பி வைக்கும் முறையை சோதனை செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இவை 1000 மாணவர்களுக்கு குறைவாக தேர்வு எழுதும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தேர்வு கூட கண்காணிப்பாளர் பாஸ்வர்ட் மூலமாக ஒரு பிரிண்ட் எடுத்து பின்பு மாணவர்களுளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஜெராக்ஸ் எடுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஒவ்வோரு தேர்வு மையத்திற்கும் சிபிஎஸ்இ சார்பில் ஒரு மேற்பார்வையாளர் இருப்பார். மேலும் ஒவ்வொரு  மையத்திற்கு தனிப்பட்ட கடவுசொல் வழங்கப்படும். இந்த சோதனையில் எதிர்பார்த்த விளைவு வந்ததால், அடுத்த வருடம் நடைபெறும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளின் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று 'ரேங்க்' பட்டியல்!!!

சென்னை : இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'ரேங்க்' பட்டியல், இன்று வெளியாகிறது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு படிப்பில், மாணவர்களை சேர்க்க, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 1.10 லட்சம் பேர் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியாகிறது. சென்னை அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர், அன்பழகன், காலை, 8:30 மணிக்கு தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார். தொடர்ந்து, ஆன்லைன் கவுன்சிலிங் துவங்கும் தேதியை, அவர் அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வு மாநில தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!!!

மதுரை : 'நீட்'தேர்வு மாநில தரவரிசை பட்டியல் இன்று(ஜூன் 28) வெளியாகும் என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தெரிவித்தது.

நீட் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் தெரிவிக்கையில், அகில இந்திய அளவில் 15 சதவீத ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. மாநில ஒதுக்கீட்டிற்கான (85 சதவீதம்) தரவரிசை பட்டியலை இன்று (ஜூன்28) தேர்வுக்குழுவெளியிடுகிறது. ஜூலையில் மாணவர் சேர்க்கை துவங்கும் என்றார்.

MBBS / BDS - Courses 2018-19 Counselling Notification!


Education loan press News: 27.06.2018



+1 Botany- New syllabus "Classification of Plants" - Video- Dr.Asir Julius

Wednesday, June 27, 2018

Click here to watch video




Shaalakosh - Extended U-DISE ( VISION DOCUMENT )

புத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம் - தொடக்கக்கல்வி அமைச்சர்!

வருங்காலங்களில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும் என்று கர்நாடக அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். மஜத கூட்டணியில் இருந்த சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மகேஷ் என்பவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தொடக்க கல்வி அமைச்சராக மகேஷ் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், சாம்ராஜ் நகரில் நடந்த மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அமைச்சர், ஒரு கருத்தை தெரிவித்தார்.

பல துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் புத்தகத்தை பார்த்து குறிப்புகள் எடுக்கின்றனர். ஆனால், மாணவர்கள் மட்டும் ஏன் புத்தகத்தை பார்க்காமல் தேர்வு எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். விரைவில், தொடக்க மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு நடக்க இருக்கும் தேர்வுகளில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும்.

அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த நடைமுறை கொண்டுவரப்படும்.
இதுகுறித்து பல நிபுணர்களிடமும், மனோதத்துவ மருத்துவர்களிடமும் ஆலோசித்து வருவதாகவும் மேடையில் பேசினார். இந்த பேச்சு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Shaalakosh - Educational Information And Basic Information!


6 முதல் 8 வகுப்புகள் வரை படைப்பாற்றல் கற்றல் நிலைகள் பாடவாரியான ஒப்பீட்டு படிவம்!!!


2018-2019 கற்பித்தல் ஆசிரியர் கையேட்டின் படி 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கான எளிய படைப்பாற்றல் கல்வி முறையின் படிநிலைகள்!!!


2018-2019 கற்பித்தல் ஆசிரியர் கையேட்டின் படி 1-3 வகுப்பிற்கான புதிய கற்பித்தல் முறையின் படிநிலைகள்!!!


ALM, TLM, MINDMAP முறையாக பயன்படுத்தவில்லை என 4 ஆசிரியர்களுக்கு MEMO - விளக்கம் அளிக்காதபட்சத்தில் மேல்நடவடிக்கை - CEO செயல்முறைகள்



Reading 100 digit Number


5th std Maths- Video Lesson - Numbers and Place Value -Part 3


5th std Maths- Video Lesson - Numbers and Place Value -Part 2


5th std Maths- Video Lesson - Numbers and Place Value -Part 1


தமிழ் உயிர் எழுத்துகளை கரும்பலகையில் அழகாக எழுதும் சிறுமி


பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு புதிய, ‘மொபைல் ஆப்’ அறிமுகம்


நாட்டின் எந்த பகுதியில் வசிக்கும் குடிமகனும், ‘மொபைல் ஆப்’ மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை, பா.ஜ.,வை சேர்ந்த, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் நேற்று துவக்கி வைத்தார்.
பாஸ்போர்ட் பெற விரும்புவோர், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை, ‘பிரின்ட் அவுட்’ எடுத்து, தேவையான ஆவணங்களுடன், சேவா கேந்திராவில் சமர்ப்பிக்கும் நடைமுறை அமலில் உள்ளது.அதன் பின், விண்ணப்பதாரரின் இருப்பிடம் மற்றும் குற்றப் பின்னணி குறித்து, போலீஸ் விசாரணை அறிக்கை அளித்ததும், பாஸ்போர்ட் அச்சடிக்கப்பட்டு, விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில், ‘மொபைல் ஆப்’ வாயிலாக, பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய ‘மொபைல் ஆப்’பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த சேவையை, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் நேற்று துவக்கி வைத்தார்.’ஆன்ட்ராய்டு’ அல்லது ஐ.ஓ.எஸ்., சிஸ்டம் மூலம் இயங்கும், மொபைல் போன்களை பயன்படுத்துவோர், தங்கள் வீட்டில் இருந்தபடியே, ‘எம் – பாஸ்போர்ட் ஆப்’பை பதிவிறக்கம் செய்து, அதில், தங்கள் விபரங்களை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்.

பாஸ்போர்ட்டுக்கான கட்டணத்தையும், இதன் மூலமே செலுத்த முடியும்.நாட்டின் எந்த பகுதியில் வசிக்கும் குடிமகனும், தான் விரும்பும் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவை தேர்ந்தெடுத்து, அங்கு சென்று, பாஸ்போர்ட்டுக்கு தேவையான அடிப்படை தகவல்களை பதிவு செய்யலாம். இந்த முறையில் விண்ணப்பிப்போர், விண்ணப்பத்தை, பிரின்ட் அவுட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், காகித பயன்பாடு குறையும்.’எம் – பாஸ்போர்ட்’ மூலமே, போலீஸ் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு, விண்ணப்பதாரருக்கு, பாஸ்போர்ட் வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை, நேற்று முதல், நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது

பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு


அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், அமைச்சர், செங்கோட்டையன், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். நிர்வாக சீர்திருத்தம், பள்ளிகளை தரம் உயர்த்துவது, ஆசிரியர்களின் பணி நிர்வாகத்தை சீரமைப்பது, கல்வி தரத்தை உயர்த்துவது என, பல்வேறு திட்டங்கள் அமலுக்கு வந்து உள்ளன.தற்போது, பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றில் சிறப்பு கவனம் செலுத்த, அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர், செங்கோட்டை யன், கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.கடித விபரம்:தமிழகத்தில் உள்ள, நர்சரி, பிரைமரி பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், வளாகத்தின் துாய்மையை மேம்படுத்த வேண்டும்.


 
பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்களை அகற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.பள்ளி வளாகத்திலுள்ள, இரு பாலின கழிப்பறைகளையும் முழுமையாக துாய்மைப்படுத்தி, மாணவர்கள் தயக்கமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை, ஒரு வாரத்தில் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நிகர்நிலைப் பல்கலை. மருத்துவக் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க 11 பேர் குழு: நீதிமன்றத்தில் யுஜிசி தகவல்

நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க 11 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளதாக, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஜவஹர்லால் சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் ஆண்டு கட்டணமாக ரூ. 18 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்பு, சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கும் உரிய கட்டணத்தை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகள் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். ஒருவேளை கல்விக் கட்டணக் குழு அதிகமான தொகையை நிர்ணயித்தால் எஞ்சிய தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும். ரூ.13 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் மீதித் தொகையை கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும், நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகள், எம்பிபிஎஸ் படிப்புக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை யுஜிசி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
குழு அமைப்பு: இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது யுஜிசி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பி.ஆர்.பி.கோபிநாதன், நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க 11 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் ஆர்.சி.தேகா நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக லக்னௌ மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூராமணி கோபால் உள்ளிட்ட 10 பேர் உள்ளனர்.
இந்தக் குழு 4 மாத காலத்துக்குள் கட்டண நிர்ணயம் குறித்து பரிந்துரைக்கும்' எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 31 -ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

அரசு கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 264 பாடப் பிரிவுகளில் சேர்க்கை பெற புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் ஜூலை 9 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் 2018-19 -ஆம் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்கவும், அதற்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ளவும் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் தமிழக முதல்வர் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, 2018-19 -ஆம் கல்வியாண்டில் 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 75 இளநிலை, 53 முதுநிலை, 65 எம்.பில்., 71 பிஎச்.டி. என மொத்தம் 264 புதிய பாடப் பிரிவுகளை தொடங்கவும், இப்பாடப் பிரிவுகளைக் கையாள 270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், அரசு கல்லூரிகளில் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க ஜூலை 9 கடைசி நாளாகும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.tn.gov.in  என்ற இணையதளத்தில் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு ஆதார் கட்டாயம்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து அதன் நகலைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
போலி இருப்பிடச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்ததாக கடந்த ஆண்டு 9 மாணவர்கள் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், போலி இருப்பிடச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படுவதைத் தடுக்க, கலந்தாய்வில் ஆதார் அட்டையைக் காண்பித்து அதன் நகலை மாணவர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மருத்துவக் கலந்தாய்வில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்களை மருத்துவக் கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
ஆவணங்கள்: கலந்தாய்வில் பங்கேற்போர் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் மதிப்பெண் அட்டை, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 6 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த பள்ளியில் வழங்கிய ஆளறிச் சான்றிதழ், கடைசியாகப் படித்த பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் அல்லது தற்போது படித்து வரும் நிறுவனத்தின் ஆளறிச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த ஆனால் 6 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வேறு மாநிலத்தில் படித்தவர்கள் இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் (பொருந்துவோருக்கு), குடும்ப அட்டை அல்லது கடவுச்சீட்டு, பெற்றோருக்கும் மாணவருக்குமான உறவைக் குறிப்பிடும் ஆவணம் ஆகிய அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பெற்றோருக்கான ஆவணங்கள்: மேலும், அந்த மாணவரின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிவிக்கும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பட்டயம் அல்லது இளநிலை அல்லது தொழில்படிப்பை படித்ததற்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் (பொருந்துவோருக்கு) ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அசலும் நகலும்: கலந்தாய்வில் பங்கேற்போர் இந்த ஆவணங்களின் அசலைக் கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும். இதுதவிர ஆவணங்களின் நகல்களையும் உடன் வைத்திருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டு திரும்பக் கொடுக்கப்படும்; ஆவணங்களின் நகல்களைக் கலந்தாய்வில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாமல் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 -இல் சென்னையில் நடக்கிறது

தமிழகத்தில் 6 -ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்புரட்சி குறித்த தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்க போட்டி, சென்னையில் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து ஆண்டுதோறும் மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கினை நடத்தி வருகின்றன. நிகழாண்டும் பள்ளி, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் மற்றும் மாநில அளவில் இப்போட்டி நடத்தப்படவுள்ளது.
தொழிற்புரட்சி 4.0: நாம் தயாராக இருக்கிறோமா?' (Industrial Revolution (IR) 4.0: Are we prepared?) என்ற தலைப்பில், நிகழாண்டுக்கான இக்கருத்தரங்க போட்டி நடைபெறவுள்ளது.
இதில், எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மாணவர்கள் ஆங்கிலம், ஹிந்தி அல்லது ஏதேனும் ஒரு இந்திய மொழியில் கருத்துகளை வெளிப்படுத்தலாம்.
இதில் பங்கேற்கும் மாணவர்கள் ஆறு நிமிஷங்களில் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவும், இரண்டு நிமிஷங்கள் நடுவர்களின் கேள்விகளுக்கு மேற்குறித்த தலைப்பையொட்டி, பதிலளிக்கும் வகையிலும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கம், ஆகஸ்ட் 17 -ஆம் தேதி நடைபெறவுள்ளதால், பள்ளி அளவில் ஜூலை 10 -ஆம் தேதிக்குள்ளும், கல்வி மாவட்ட அளவில் ஜூலை 24 -ஆம் தேதிக்குள்ளும், வருவாய் மாவட்ட அளவில் ஆகஸ்ட் 2 -ஆம் தேதிக்குள்ளும் கருத்தரங்குகளை நடத்தி முடிக்க வேண்டும்.
பள்ளி அளவில் தலைமையாசிரியர், கல்வி மாவட்ட அளவில் மாவட்டக் கல்வி அலுவலர், வருவாய் மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு அலுவலர்களாக செயல்பட வேண்டும்.
பள்ளி அளவில் முதல், இரண்டாமிடம் பெறும் மாணவர்களை கல்வி மாவட்ட அளவிலும், கல்வி மாவட்டத்தில் முதல், இரண்டாமிடம் பெறும் மாணவர்களை வருவாய் மாவட்டத்திலும், வருவாய் மாவட்டத்தில் முதல் இடம் பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க இயலும்.
மாநில அளவிலான கருத்தரங்கம் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெறும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

10-ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் புதன்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் www.tndge.in   என்ற இணையதளத்தில் தங்களது மறுகூட்டல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்குரியவர்களின் விடைத்தாள்களில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது என்று தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

ஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை பொழிவது ஏன்?


ஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை பொழிவது ஏன்?

பிரமிளா கிருஷ்ணன்
பிபிசி தமிழ்

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஆசிரியர் பகவான் கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போது, அவரை அனுப்பக்கூடாது என மாணவர்களும், பெற்றோர்களும் கதறி அழுது, கோஷமிட்டு நடத்திய போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றது.

அவர் பணிபுரியும் திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் அரசுப்பள்ளிக்கும், அதே மாவட்டத்தில் அவர் பிறந்த ஊரான பொம்மராஜுபேட்டை கிராமத்திற்கும் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டார் ஆசிரியர் பகவான்.

அவர் பணிபுரியும் பள்ளிக்குச் செல்லும் வழியில் அவரை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனர் நமக்கு வழிகாட்டியது.

வில்லாய் வளையும் 99 வயது நானம்மாள்
ஆசிரியர் - மாணவர் மோதல்: ஹார்மோன்கள் காரணமா?
ஆசிரியர் பகவான் செய்த மேஜிக்

பகவான் வேறு பள்ளிக்குச் செல்கிறார் என்பதை ஏற்காத குழந்தைகள் அவரை தடுத்தது சமூக வலைத்தளங்களில் பெருமளவு பேசப்பட்டது.

1980ல் தொடங்கப்பட்ட வெளியகரம் அரசுப்பள்ளியின் வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட 28 வயதே ஆன ஆசிரியர் பகவான், அவரது முதல் பணியிடத்திலேயே அனைத்து விருதுகளையும் பெற்றுவிட்டது போல உணருகிறார்.

பகவான் ஆசிரியரிடத்தில் ஏன் இத்தனை அன்பு என்று கேட்டபோது, ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு பதில் வருகிறது. பலரிடமும் கிடைத்த பதில்,''அன்பா பேசுவாரு, எளிமையா பாடம் நடத்துவாரு, எங்களுக்கு பிடிக்கும் நிறையா'' என்கிறார்கள் குழந்தைகள்.

மாணவர்களின் அன்பை பெற என்ன செய்தார் ஆசிரியர் பகவான்?

''என்னிடம் படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் என் வீட்டுக்குழந்தை போல எண்ணுகிறேன். படிக்கவில்லை, வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் அதற்கான காரணத்தை கேட்பேன். பின்னர் அதை எப்படி சரி செய்வது என்று யோசனை கூறி அந்த குழந்தைக்கு உதவுவேன். அவர்களின் ஊர் திருவிழா, குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள், அவர்களின் சோகமான தருணங்களில் நான் ஒரு அண்ணனாக இருக்கிறேன். என்னை நம்பி குழந்தைகள் அவர்களின் சந்தோஷங்களையும், பிரச்சனைகளையும் பகிர்ந்துகொள்வார்கள். அதுவே இந்த குழந்தைகளிடம் நீங்கா அன்பை பெற்றுத் தந்துள்ளது. ஆனால் என் பணியிட மாறுதலை தள்ளிப்போடும் அளவுக்கு போராட்டம் நடத்துவார்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை,'' என்கிறார் பகவான்.

அவரது வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது நுழைந்தோம். ஆங்கில வகுப்பில் மரங்களைப் பற்றிய பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ''எங்க வீட்டில் இருந்து நடந்து வரும்போது நிறைய மரங்கள்-ட்ரீஸ் இருக்கும். நான் அவற்றை உற்றுகவனிப்பேன்..அப்சர்வ் செய்வேன்,'' என பேசிவிட்டு, இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்தைகளை எழுதியிருந்தார். அதற்கு ஏற்ற படங்களையும் வரைந்திருந்தார்.

கடைசிவரிசையில் அமர்ந்துள்ள மாணவர்களிடம் நின்றுகொண்டு, ''நீங்களும் ட்ரீஸ்சை அப்சர்வ் பண்ணுவீங்காளா?,'' என்று கேட்டவுடன் சிரிப்பும் கேள்விகளும்.

''பள்ளிப்பருவத்தை குழந்தைகள் முகத்தில் பார்க்கிறேன்''

பள்ளிக்கூடத்திற்கு வந்த குழந்தைகள் வீட்டில் என்ன சிக்கல்களை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரியாமல், வெறும் பாடம் மட்டும் நடத்தி, மார்க் வாங்கு என்று சொல்லமுடியாது என்பது பகவானின் முடிவு. ''எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் என்னை வளர்த்தெடுத்தார்கள். வறுமை, குடும்ப பிரச்சனைகள் என சுமைகளை சுமந்துகொண்டு பள்ளிக்கு வந்தால், ஆசிரியர்களின் கனிவான வார்த்தைகளும்,கவனிப்பும்தான் எனக்கு ஆறுதலை தந்தன. என் மாணவர்களிடமும் அதேபோல நடந்து கொள்கிறேன்,'' என்கிறார் பகவான்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பகவானின் குடும்பம் குடிசையில்தான் வசித்தது. வறுமையின் வலி தெரிந்த பகவான், வேகமாக இயங்கும் போட்டி நிறைந்த உலகில் அரசுப் பள்ளிக் குழந்தைகள் சந்திக்கும் சவால்களை நன்கு அறிந்தவராக இருக்கிறார்.

ஆசிரியர் செல்லாத தீவு: பள்ளிக்கு தினம் படகில் செல்லும் மாணவர்கள்
திருமணத்துக்கு பயந்து இந்தியா வர மறுக்கும் இளம்பெண்ணின் கதை
தனது பள்ளிப்பருவத்தின் அனுபவங்களைப் பசுமையாக மனதில் பதித்துவைத்திருக்கும் பகவான், ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் தனது பள்ளிப்பருவத்தைப் பார்ப்பதாக கூறுகிறார். அரசுப்பள்ளியில் படித்த பகவான், அரசுப்பள்ளியில் வேலை செய்வது தனக்கு கிடைத்த வரம் என்கிறார்.

செர்ரி பழம் கொடுத்த பிஞ்சு கைகள்

''ஏழாம் வகுப்பில் செர்ரி மரம் பற்றிய பாடம் நடத்தினேன். செர்ரி மரம் நம் ஊரில் கிடையாது. நானே பார்த்ததில்லை என்பதால், மாணவர்களுக்குக் காண்பிக்க மல்டிமீடியா வகுப்புக்கு கூட்டிச்சென்று இணையத்தில் காண்பித்தேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒரு மாணவி என் கையில் செர்ரி பழங்களை தந்தாள்.

சார் இதுதான் நீங்க பாடம் நடத்திய செர்ரி மரத்தின் பழம். அந்த குழந்தையின் உறவினர் ஒருவர் டெல்லியில் இருந்து கொண்டுவந்ததை அவள் சாப்பிடாமல், எனக்கு அந்த குழந்தை கொடுத்தாள். செர்ரி மரம் பாடத்தை அந்த குழந்தை நன்கு உள்வாங்கியுள்ளது என்பதை அறிந்தபோது, பெருமகிழ்ச்சியாக இருந்தது. செர்ரியின் சுவை அத்தனை இனிப்பு இல்லை என்றாலும், அந்த பிஞ்சு கைகளில் பிசுபிசுப்புடன் எனக்காக கொண்டுவந்து தந்த சம்பவம் என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது'' என உணர்ச்சி பொங்க விவரிக்கிறார் பகவான்.

ஒரு மாணவியின் தந்தை குடிப்பழக்கத்தில் இருப்பவர் என்பதால், அந்த குழந்தை பள்ளிக்கு வருவதே குடும்பச் சூழலை மறப்பதற்கு என்ற நிலை இருப்பதாக கூறினார்.

''எங்க அம்மா, அப்பாகிட்ட சார் பேசினாரு. அப்பா மாறனும் அதுதான் என் ஆசை,'' என்று சொல்லிவிட்டு கண்ணீர்விடுகிறாள் ஹேமஷிரி. ''அழாமல் இரு, சரியாகிடும், நான் இருக்கிறேன்,'' என தைரியம் சொல்லி ஹேமஷிரியை சமாதானம் செய்துள்ளார் பகவான்.

பகவானைப் போல பல ஆசிரியர்கள்

இந்த அளவுக்கு மாணவர்களின் அன்புக்கு பாத்திரமான ஆசிரியரை அனுப்ப ஏன் முடிவுசெய்யப்பட்டது என்று தலைமை ஆசிரியர் அரவிந்திடம் கேட்டோம்.

''குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை இருக்கவேண்டும். இந்த ஆண்டு உள்ள மாணவர்களின் விகிதத்தைவிட ஆசிரியர் விகிதம் அதிகமாக உள்ளதால், பணியில் உள்ள இளம் ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றவேண்டும் என்பது விதி. அதைத்தான் செய்கிறோம். குழந்தைகளின் அன்பை நாங்களும் புரிந்துகொண்டுள்ளோம், அதனால் பணியிட மாறுதலை தள்ளிவைத்துள்ளோம்,'' என்கிறார்.

பள்ளிக்கூடத்தின் எல்லா நிகழ்வுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் பகவான், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பற்றிய பிம்பத்தை மாற்றியுள்ளார் என்கிறார் அரவிந்த். ''அரசுப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் பற்றிய விவாதத்தை பகவான் தொடங்கிவைத்துள்ளார்," என்கிறார் இவர்.

ஊடக வெளிச்சத்திற்கு வராத பகவானைப் போல பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர், அவர்களைப் பற்றி பேசவேண்டும் என்பதற்கு எங்கள் பள்ளி ஒரு தொடக்கப்புள்ளியாக இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி,'' என்றார் அரவிந்த்.

புதிய பாடத்திட்டத்தை Digital முறையில் மாற்றிய ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களுடன் - இந்த பதிவு...

ICT ஆசிரியர்கள், பிற  ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின்  11 மாதகால இடைவிடாத உழைப்பினால் 1,6,9,11 வகுப்புகளுக்கான பாடபுத்தகங்களில் உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சி சாதனையின் காரணமாக பிறந்தது தான் மாநில அளவிலான ( Digital Content Cell & Assessment Cell )

*இது போன்ற ஒரு கட்டமைப்பு தேவை என்பது நெடுநாள் கோரிக்கை மட்டுமல்ல  ICT -ல் முனைப்புடன் செயல்படும் ஒவ்வொரு ஆசிரியரின்  கனவு...

*இந்த உட்கட்டமைப்பை உருவாக்க திட்டமிடும் பணியை கல்வித்துறையானது மாநில திட்ட இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்டது.

*இது போன்ற கட்டமைப்பு மாநிலத்தில் மட்டுமல்ல மண்டல மாவட்ட அளவில் ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்ச்சி மற்றும் டிஜிட்டல் பாட தயாரிப்புகள் மேற்க்கொள்ள  தேவை என்பதையும் தயாரித்ததை பயன்படுத்த பள்ளி வகுப்பறையில் தேவையான உட்கட்மைப்புகள் பற்றி தன்முனைபுடன்  ICT சாதனங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் ஆசிரியர்களின் கருத்துக்களை பெற்று பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது...

*இந்த பரிந்துரைகளை பெற்ற மத்திய அரசின் MHRD, நமது மாநில செயல்பாடுகளை பார்வையிட  கடந்த June 21 அன்று MHRD சிறப்பு செயலர் வருகை புரிந்து புதிய பாடபுத்தகங்களில் நாம் மேற்கொண்டுள்ள டிஜிட்டல் பணிகளை ஆய்வு செய்தார் உடன் பள்ளிக் கல்வி செயளலர், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், அதிகாரிகள்  மற்றும்  ஆசிரிய நண்பர்கள் உடன் இருந்தனர்...

*நமது மாநிலத்தின் செயல்பாடுகளையும் இவை அனைத்தையும் உருவாக்கியது  ஆசிரியர்களின் பெருமுயற்சியில் தான்  என கூறிய போது வியந்து பாராட்டினார் மனிதவள  சிறப்பு செயலர் ...

*மேலும் இந்த செயல்பாடுகளை கொண்டு மாணவர்களின் திறன்களில் ஏற்படும் இடைவெளியை சரி செய்யும் திட்டமிடல் இருந்தால் தான் இந்த பணி முழுமை பெறும்  என்று அறிவுரை வழங்கினார்.

*மேலும் இந்த பணிகளில் QR Code fixing, mapping, uploading பணிகளை நண்பர்கள் ஜகன்நாதன், ஜகன்,ராய்யும்...

*Digital content பொறுத்தமட்டில்... மெக்டலின் அக்கா ஒருங்கிணைப்பில்... 1 -ம் வகுப்பு நண்பர் தினேஷ் மற்றும் ஆசிரிய குழுவினர், 6-ம் வகுப்பு நண்பர் ஜான் மற்றும் ஆசிரிய குழுவினர், 9 -ம் வகுப்பு நண்பர் திலிப் மற்றும் ஆசிரிய குழுவினர், 11-ம் வகுப்பு மெக்டலின் மற்றும் ஆசிரிய குழுவினர் தயாரிப்பில் ஈடுபட்டனர்...

*Digital Assessment பொருத்தமட்டில், என்னுடைய ஒருங்கிணைப்பில் 1- ம் வகுப்பு திரு. பிரபுராஜா மற்றும் ஆசிரியர்கள், 6-ம் வகுப்பு திருமதி.செந்தில்குமாரி மற்றும் ஆசிரியர்கள், 9 - ம் வகுப்பு திரு. அசோக் மற்றும் ஆசிரியர்கள், 11-ம் வகுப்பு திருமதி.ஹமா மற்றும் ஆசிரியர்கள் தயாரித்தனர்...

*Video Lesson... மெக்டலின் அக்கா ஒருங்கிணைப்பில், அண்ணன் அமலன் ஜெரூம் மற்றும் குழுவினர் தயாரிப்பு பணியில் உள்ளனர்...

*இந்த அனைத்து வளங்களையும் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய பயன்படுத்தும் DIKSHA( TNTP ) தளத்தின் Admin என்ற வகையில் product development, bug rising, data analysis and validation பணிகளை CSF, TFI மற்றும் Ekstep போன்ற NGO நிறுவனங்கள் துணையுடன் செய்து வருகிறோம்.

*தயாரித்த வளங்களை வகுப்பறையில் பயன்படுத்துவதற்க்கான பயிற்சியினை... பயிற்ச்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அன்பழ்கன் மற்றும் ஆசிரிய குழுவினர் வழங்கிவருகின்றனர்.


*இப்பணியினை திறம்பட செய்து முடித்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் எங்களுக்கு வாய்ப்பளித்த மதிப்புமிகு.பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர், மதிப்புமிகு.பள்ளிக்கல்வி செயலர், மதிப்புமிகு.SPD sir, மதிப்புமிகு.பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு.இணை இயக்குநர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அத்துணை அலுவலர்களுக்கும் எங்கள் Digital Contant, Digital Assessment குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

*ஊர் கூடி தேர் இழுத்தோம்... அதனால் புதுமைகள் பலவுடன் புதிய புத்தகம் உங்கள் கையில் ... பாருங்கள்... பகிருங்கள்... உங்கள் கருத்துக்களை... மெருகேற்றுவோம் அடுத்த பருவங்களில்...

தகவல் பகிர்வு

திரு.திலீப் ஆசிரியர்,
திரு.சதீஷ் ஆசிரியர்

ஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் சோகம்

ஒரே ஒரு செட் சீருடை மட்டுமே வழங்கியிருப்பதால், அரசு பள்ளி மாணவ, மாணவியர், கடந்த ஆண்டு சீருடைகளை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், செருப்பு, நான்கு செட் சீருடை, கலர் பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஸ்கூல் பேக் உட்பட, 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தாண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஒன்பதில் இருந்து பிளஸ் 2 வரை சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய சீருடை என்பதால், துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ஒரு செட் சீருடை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரே அளவுள்ள சீருடை வழங்கப்பட்டு உள்ளது. மூன்று, நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் இறுக்கமாகவும், முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பெரிதாகவும் உள்ளது. அளவுக்கு ஏற்ப சீருடை வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். ஒரே ஒரு செட் மட்டும் வழங்கியிருப்பதால், கடந்தாண்டு சீருடையையும் அணிந்து வர, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

காரமடை வட்டார கல்வி அலுவலர் தேசிங் கூறியதாவது:காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 98 துவக்கப்பள்ளிகள், 26 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 9,793 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் நான்கு செட் இலவச சீருடை வழங்க வேண்டும். இந்தாண்டு சீருடை மாற்றம் செய்ததால், ஒரு செட் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு வரை ஒரு அளவிலும், நான்கு, ஐந்து வகுப்புகளுக்கு ஒரு அளவிலும் சீருடைகள் தைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு ஏற்ப, 'சைஸ்' மாற்றம் செய்து கொடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பேக், செருப்பு, பென்சில் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பொருட்கள் வந்தவுடன் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்

School Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் :

21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள்

28/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள்

4/8/18 - சனிக்கிழமை CRC பயிற்சி நாள்

BRC NEWS: District Assessment Survey test for all 8th std students


District Assessment Survey test for all 8th std students in Math and Science is to be conducted as per Respected District Collector's Initiative on 29.6.18. Math from 10-11.30 am Science 1.30-3.00 pm. Separate question papers for Tamil medium and English medium students. Question papers for High and Hr Sec Schools will be sent by mail on 28th afternoon . Each school must make copies for each of their students. For middle schools mail will be sent to the blocks. Blocks must give one copy of em and tm qp to each school. Middle schools must make copies for each student. Kindly be prepared. Proceeding follows.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் PLASTIC பொருட்களுக்கு தடை - இயக்குனர் உத்தரவு


வட்டாட்சியர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை ஆட்சியர்களாக பணி நியமனம்-ஆணை 26-06-2018


More reads...
CLICK HERE

ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை உரிய முறையில் பெற்றுத் தர பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவு!

ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை  உரிய முறையில் பெற்றுத் தர வேண்டும் -பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நிர்வாக மாறுதல்க்ளை அடுத்து பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவு - ஆணை


ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக்க வேண்டும் - கருவூல அதிகாரி உத்தரவு

பள்ளிக்கல்வித்துறையின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் ஜூன் 2018 மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக்க வேண்டும் - அனைத்து கருவூலங்களும் மாநில கருவூல அதிகாரி உத்தரவு.


10th std Social Science June 2018 test

Tuesday, June 26, 2018

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவித்தல் அரசாணை வெளியீடு

2018-19 ஆம் கல்வியாண்டு- ஜீன் -ஜீலை -ஆகஸ்ட் மாதத்திற்கான -அனைத்து வகை பள்ளிகளுக்கான ஆண்டு செயல்திட்டம்-SCHOOL DIARY

அனைத்து மாணவா்களுக்கும் எமிஸ் பதிவு கட்டாயம்

அனைத்து மாணவா்களுக்கும் எமிஸ் பதிவு கட்டாயம்: அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலா்

அரக்கோணம்: கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் அனைத்து மாணவா்களுக்கும் பதிவு கட்டாயம் இருக்க வேண்டும் என அரக்கோணத்தில் செய்தியாளா்களிடையே அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலா் குணசேகரன் தெரிவித்தார்.

சிஎஸ்ஐ சென்னை பேராயத்தின் சிஎஸ்ஐ மருத்துவமனையினா் மற்றும் அரக்கோணம் சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியினா் இணைந்து ஐந்து நாட்கள் மாணவ மாணவியருக்கான மருத்துவ முகாமை சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியில் நடத்துகின்றனா். இம்முகாமை அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலா் குணசேகரன் செவ்வாய்கிழமை துவக்கி வைத்தார்.

முகாமில் மருத்துவா்கள், தலைமை ஆசிரியா், ஆசிரியா் மற்றும் ஆசிரியைகள், மாணவ மாணவியா்களிடையே முகாம் பற்றி கேட்டறிந்த மாவட்ட கல்வி அலுவலா், தொடா்ந்து அங்கு செய்தியாளா்களிடையே தெரிவித்ததாவது:

கடந்த காலங்களில் பள்ளிகளில் வருகை பதிவேடுகள் முறையற்றவையாக பராமரிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து பள்ளிகளிலும் மிகவும் சரியான வருகை பதிவேடு பராமரிக்க உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை மற்றும் மாணவா் விவரங்களை உயா் அலுவலா்களும் தெரிந்துகொள்ளும் வண்ணம் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு எனும் எமிஸ் எனப்படும் இணையதள பக்கத்தில் பதிவேற்றப்படுகிறது.

இந்த எமிஸ் இணையதள பக்கத்தில் பதிவேற்றாத ஒரு மாணவா் கூட பள்ளியில் இருக்கக்கூடாது என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இடையில் மாணவா்கள் சோ்ந்தாலும் அவா் கடைசியில் எங்கு படித்தாரோ அந்த பள்ளியில் இருந்து எமிஸ் பதிவெண் பெற்று தற்போது சோ்ந்திருக்கும் பள்ளியில் சோ்க்க வேண்டும்.

குறைந்த மாணவா்கள் அதாவது ஒரிலக்க எண்ணிக்கை மாணவா்கள் கொண்ட தொடக்கப்பள்ளிகளுக்கு இந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வரை சோ்க்கைகான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அப்பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க பள்ளியின் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அவ்வபோது வரும் அரசு உத்தரவுக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஓராசிரியா் இருப்பது தெரியவந்தால் அது அரசுப்பள்ளியாக இருப்பின் உடனடியாக அங்கு காலியாக இருக்கும் பணியிடம் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு நிதியுதவி பள்ளியாக இருந்தால் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டு அதன் பின்னும் அக்காலியிடம் நிரப்பப்படாமல் இருந்தால் அரசே அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் என்றார் மாவட்ட கல்வி அலுவலா் குணசேகரன்

பாடப்புத்தகத்தில் கி.மு - கி.பி மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை: அமைச்சா் பாண்டியராஜன்

புதிய பாடத்திட்டத்தில் கி.மு - கி.பி. என்பதற்கு பதிலாக பொ.ஆ.மு. (பொது ஆண்டுக்கு முன்) என மாற்றப்பட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழறிஞா் ம.பொ.சிவஞானம் 113-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயநகா் போக் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதிய பாடத்திட்டத்தில் கி.மு. - கி.பி. என்பதற்கு பதிலாக பொ.ஆ.மு.- பொ.ஆ.பி. (பொது ஆண்டுக்கு முன் - பொது ஆண்டுக்கு பின்) என மாற்றப்பட்டது குறித்து செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அப்போது, ‘ பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த வல்லுநா்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றறம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரலாற்றை ஒரு
மதச்சார்பின்மையுடன் குறிப்பிடும் நோக்கில் மாற்றப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்துவின் பெயா் வரக்கூடாது என்ற எண்ணமும் இல்லை; அரசியல் நோக்கமும் இல்லை. ஏனெனில் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்ற அறிஞா்கள் அனைவருமே அரசியல் கலப்பில்லாதவா்கள். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டதற்கு இதுவரை எந்த எந்தவித எதிர்ப்போ அல்லது புகார்களோ வரவில்லை. அப்படி ஏதேனும் விமா்சனங்கள் வரும் பட்சத்தில் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் முடிவெடுப்பார் என்றார் அமைச்சா் பாண்டியராஜன்

11 th Physics - Expected Important 5 Mark Questions



2018-2019 கல்வியாண்டில் புதியதாக 2283 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் Smart Class Room அமைக்க பள்ளிகளின் விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறை



புதிய பாடப்புத்தகங்கள்... ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி

நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.*

*மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சி சென்னையில் இன்று தொடங்கியது.*

*ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டில் பாடப்புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.*

*இதுவரை இல்லாத அளவுக்கு பாடங்களின் அளவும் தன்மையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான பாடப்புத்தக மாற்றத்தைப்போல அல்லாமல், இந்த முறை சற்று கனமாக உள்ளதால், புதிய உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதில் ஆசிரியர்களுக்கே சிரமமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.*

*இதனால் புதிய பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.*

*இதில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு பாடத்துக்கும் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.*

*இப்பயிற்சியை முடித்தவர்கள் அவரவர் மாவட்டத்துக்குச் சென்று மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற ஆசிரியர்களுக்கு இதே பயிற்சியை வழங்குவார்கள்.*

*அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்கும்வகையில் பின்னர் வட்டார அளவிலும் பயிற்சி விரிவாக்கப்படும்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One