எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

போட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி : கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Thursday, March 29, 2018


ஈரோடு: ''நீட் உள்ளிட்ட, மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்க, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு, சம்பத் நகரில் உள்ள டிஜிட்டல் நுாலகத்தில், மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், யு.பி.எஸ்.சி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., போன்ற போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தை திறந்து வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:நீட் தேர்வுக்கான 412 மையங்களில், 312 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 70 ஆயிரத்து, 439 மாணவர்கள், இங்கு பதிவு செய்துள்ளனர். மொத்தம், 72 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுவர் என, எதிர்பார்க்கிறோம். கூடுதலாக மாணவர்கள் வந்தாலும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள, 32 மாவட்ட தலைமை நுாலகத்திலும், நீட், யூ.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., போன்ற மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து பயிற்சியும், இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கும், ஏழை மாணவர்கள், பதிவு செய்து, நீட் தேர்வு பயிற்சியை பெறலாம். நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையானால் கூடுதல் நிதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு - நீலகிரி இடையே விரைவில் 4 வழிச்சாலை : ''ஈரோட்டில் இருந்து நீலகிரிக்கு விரைவில், நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். இதன் மூலம், விபத்துகள் குறையும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், தேவையான இடங்களில், நான்கு வழிச்சாலையும், இரு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. ஈரோட்டில் இருந்து, நீலகிரி வரை, விரைவில் நான்கு வழிச்சாலை அமைய உள்ளது. இதற்கான திட்ட வரைவு தயாரித்து, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதுகாப்பான பயணத்துடன், விபத்துகள் குறையும்.இப்பகுதி மக்களின் நீண்ட கால கனவான, அத்திக்கடவு - அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். இதற்காக, 1, 289 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One