எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

குரங்குகளை அரவணைக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்

Friday, April 27, 2018


வறட்சி காரணமாக இரை தேடி அலையும் குரங்குகளுக்குப் பழம், தண்ணீர் கொடுத்து உதவி வருகிறார் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராமலிங்கம்.
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புதுவடவள்ளி பண்ணாரி அம்மன் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம், ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது வீட்டுக்கு எதிர்ப்புறம் உள்ள தோட்டக் கலைக்குச் சொந்தமான இடத்தில் வெயிலுக்கு குரங்குகள், ஆடுகள், பறவைகள் வந்து தங்குவது வழக்கம். அப்போது, குரங்குகள் தண்ணீர் தேடி அலைவதையும், அழுகிய பழங்களை சாப்பிடுவதையும் பார்த்த ராமலிங்கம், குரங்குகளுக்கு குடிக்க ஒரு வாளியில் தண்ணீர் வைத்து உதவியுள்ளார்.
 தாகத்தால் தவித்த குரங்குகள் தண்ணீரைப் பார்த்தவுடன் அங்கு வந்து குடிக்கத் துவங்கியுள்ளன. அதைத் தொடர்ந்து, தினந்தோறும் பழங்கள், தண்ணீர் வைத்து குரங்குகளுக்கு உதவி வந்துள்ளார். இதனால், 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் ராமலிங்கத்துடன் பாசத்துடன் பழகி வருகின்றன.
 வனத்தில் இருந்து காலை 7 மணிக்கு அவரது வீட்டின் முன்பு வந்துவிடும் குரங்குகள் அங்கு அவரது வருகைக்காக காத்திருக்கும். அவர் வாளியில் தண்ணீர், பழங்கள் கொண்டு வருவதைப் பார்த்தவுடன் அவரது தோளில் ஏறி, அவற்றைப் பறித்துச் சென்று மரத்தில் ஏறிவிடும்.
 குரங்குகள் மட்டுமின்றி ஆடு, பறவைகள், குதிரை என அனைத்தும் தண்ணீர் குடித்துவிட்டுச் செல்கின்றன.
 குரங்குகள் பெரும்பாலும் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம். ஆனால், இங்குள்ள குரங்குகள் எதிரே உள்ள மளிகைக் கடைகளில் உள்ள பொருள்களை எடுத்துக் கொண்டு ஓடுவதில்லை. மாறாக கடைக்காரர் கொடுத்தால் மட்டுமே வாங்கும் நல்ல பழக்கம் உடையது என்று அக்கிராம மக்கள் தெரிவித்னர்.
 கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வனத் துறையினர் இந்தக் குரங்குகளை கூண்டுவைத்துப் பிடித்து திம்பம் 20-ஆவது மலைப் பாதையில் விட்டனர். ஆனால், சில நாள்களிலேயே இந்தக் குரங்குகள் மீண்டும் இங்கு வந்துவிட்டன.

  •  மனித நேயம் குறைந்து வரும் இந்தக் காலகட்டத்தில் மனிதர்களிடம் அன்புடன், நேர்மையுடன் பழகும் குரங்குகளின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One