புதிய பாடத்திட்டத்தில் உருவான பாடங்களை மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பது என்பது தொடர்பான பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பள்ளிக் கல்வித்துறையில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் முதன்மைக் கல்வி அலுவலகங்களை காலி செய்து சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் முதன்மைக் கல்வி அலுவலருக்கான சொந்த கட்டிடம் எழும்பூர் மகளிர் மேனிலைப் பள்ளியில் கட்டப்பட்டது.
நேற்று அந்த அலுவலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து பேசியதாவது: சென்னை சைதாப்பேட்டையில் பனகல் மாளிகையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த முதன்மைக் கல்வி அலுவலகம் இனி சொந்த கட்டிடத்துக்கு மாற்றியதால் அதற்கான நிதியை வேறு திட்டத்துக்கு பயன்படுத்தலாம்.
சிஏ படிப்புக்கான கருத்தரங்கம் நாளை மறுதினம் நடக்கிறது. அதில் 16 மாவட்டங்களை சேர்ந்த 500 பேர் கலந்து கொள்கின்றனர். இதன் மூலம் விரைவில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு சிஏ படிப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்படும். அதன் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியும். மாணவர்களின் திறன் சார்ந்த பயிற்சியை புதியதாக பாடத்திட்டத்தில் இணைக்க இருக்கிறோம்.
இது போல இன்னும் பல மாற்றங்கள் புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். புதிய பாடத்திட்டத்தின் படி 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment