எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் -29-08-2018

Tuesday, August 28, 2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:39

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

உரை:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

பழமொழி :

Ass loaded with gold still eats thistles

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

பொன்மொழி:

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண்
புரிந்து கொள்வது அவசியம்.

-அன்னை தெரசா.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது?
மும்பை

2.உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
மூன்றாமிடம்



நீதிக்கதை :


பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்


ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.
கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.
கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..
அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.
அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.
பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.


இன்றைய செய்தி துளிகள்:

1.இந்தியாவுக்கு குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்காதது ஏன்? முகநூல், வாட்ஸ் ஆப், டிவிட்டர் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

2.காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு....... முக்கொம்பு பணிகள் பாதிக்கும் அபாயம் உடைப்பை அடைக்க தீவிரம்

3.வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

4.2019 ஜனவரி 3-இல் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

5.ஆசிய விளையாட்டு: 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் என 50 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் இந்தியா

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One