எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இன்று உலகுக்கு ஒளி தந்த விஞ்ஞானி மைக்கேல் பாரடே பிறந்தநாள்- செப்டம்பர் 22

Saturday, September 22, 2018





மின்சாரம் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்யுங்கள் ! எப்படிப் பட்ட இருள்!

இருளை நீக்கும் மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர்களில் மிக முக்கியமானவர் 14-ம் வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

அறிவியல் அடிப்படையில் காலகட்டங்களை வரிசைப் படுத்தினால் எப்படி இருக்கும்? முதலில் வேளாண்மை யுகம், தொழில் துறையுகம், பிறகு மின்னியல் யுகம். அதன் பிறகு மின்னணுவியல் யுகம், அதற்கும் பிறகு இன்றைய அணுயுகம் என வரும்.

இன்றைய நவீன யுகத்தின் அடிப்படையாக இருப்பது மின்னியல் யுகம்தான். இதுதான் உலகை முற்றிலுமாக மாற்றிய காலகட்டம் என்றும் கூறலாம். அத்தகைய அடிப்படையான மாற்றத்துக்குக் காரணமான மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர்தான் பாரடே.

ஏழ்மையில்...

மைக்கேல் பாரடே பிரிட்டனைச் சேர்ந்தவர். இவர் 1791-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி பிறந்தார். மின் காந்தவியல், மின் வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

தற்போது உலகம் முழுவதும் உள்ள சோதனைச் சாலைகளில் பொருள்களைச் சூடாக்குவதற்காகப் பயன் படுத்தப்பட்டுவரும் பன்சன் சுடர் அடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டறிந்தவர் இவர்தான்.

பாரடே தெற்கு லண்டனில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். அப்பா ஜேம்ஸ் பாரடே ஒரு கொல்லர். இளம் வயதிலிருந்தே மைக்கேல் தனது படிப்புக்கு ஆகும் செலவுக்காக வேலை பார்க்க வேண்டி இருந்தது. 14 வயதில் பழைய புத்தகங்கள் வாங்கி, பைண்டிங் செய்து விற்று வந்த ஜார்ஜ் ரீபோவிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கே வேலை பார்த்த ஏழு வருடங்களில் ஏறக்குறைய எல்லாப் புத்தகங்களையும் படித்துவிடுவார். இதனால் அறிவியலிலும், குறிப்பாக மின்னியலிலும் அவருக்கு ஆர்வம் வளர்ந்தது.

டேவியின் உதவியாளர்

புகழ்பெற்ற வேதியியல் மற்றும் இயற்பியலாளரான ஹம்ப்ரி டேவியின் விரிவுரை களைக் கேட்கும் வாய்ப்பு இவருக்கு 20 வயதில் கிடைத்தது. அவற்றைக் கேட்டு எழுதிய குறிப்புகளை டேவிக்கு பாரடே அனுப்பிவைத்தார்.







அவருடைய உதவியாளராகத் தன்னைச் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அவருக்குப் பதில் எழுதிய டேவி சரியான சந்தர்ப்பத்தில் இவரைப் பயன்படுத்திக்கொள்வதாகவும் இப்போது செய்துவரும் வேலையையே தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் அறிவுரை கூறியிருந்தார்.

சிறிது காலம் சென்றது. ஒரு வேதியியல் சோதனையின்போது டேவி விபத்தில் சிக்கினார். அதனால் கண்பார்வையை இழந்தார். அப்போது அவருக்கு ஒரு உதவியாளர் தேவைப்பட்டார். அதனால் டேவி, மைக்கேல் பாரடேயைத் தன் உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். ஒரு சமயம் ராயல் சொசைட்டியில் ஒரு சோதனைச்சாலை உதவியாளர் பணியிலிருந்து விலக்கப்பட்டார். அந்த வேலை பாரடேவுக்குக் கிடைக்க டேவி ஏற்பாடு செய்தார்.

மின்சாரம்

மின்சாரத்தைக் கண்டுபிடிப்ப தற்காக பாரடேக்கு முன்பும் கூடப் பலர் பல முயற்சிகளைச் செய்துள்ளனர். 1831-ம் ஆண்டு பாரடேவும் மின்சாரம் பற்றிய முக்கியமான ஆய்வுகளைச் செய்தார். அது மற்றவர்களின் ஆய்வுகளை விட மேம்பட்டதாக இருந்தது.

அதற்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு சீமென்ஸ் என்ற விஞ்ஞானி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கருவியைக் கண்டறிந்தார். அதற்கும் 23 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்குகளைக் கண்டுபிடித்தார்.

மின்சாரம், மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கருவி, மின்சாரத்தைக் கொண்டு பயன்படுத்தப்படும் பொருள்கள் என்று இந்த மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாகக் கண்டறியப்படுவதற்கு ஏறத்தாழ 50 ஆண்டுகளாயின. ஏறத்தாழ 19-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வந்தன.

அதன் மின்சாரம் நமது வாழ்வில் நடைமுறைக்கு வருவதற்கு மற்றுமொரு கால் நூற்றாண்டு ஆனது. இன்று பெரும்பாலான வீடுகளில் மின்சாரம் நுழைந்துவிட்டது.

பல்துறை ஆய்வு

பாரடே சோதனைச் சாலையில் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார். குறிப்பாக, மின்சாரம், காந்தம் துறைகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். மின்சாரத்தின் விளைவுகள் குறித்து ஆராய்ந்துகொண்டே இருந்தார்.

ஏதோ ஒரு இடத்தில் ஷாக் அடிக்கிறதே அங்கு என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்தார். மின்சாரத்தைக் கம்பியின் மூலம் அனுப்பும்போது, பக்கத்தில் இருக்கும் திசைகாட்டி காந்தம் திரும்பிவிடுகிறது என்பதையும் ஆராய்ந்து, காந்தத்தின் மூலமும் மின்சாரத்தை இயக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார்.

அவருடைய ஆய்வுகள் அனைத்தும் மின்சாரம், காந்தம் தொடர்புடையவையாகவே இருந்தன. எலக்ட்ரோ மேக்னட் துறையின் தந்தை என்று இவர் கருதப்பட்டார். மின்னணு என்று சொல்லப்படும் எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும் புதிய தடங்களைப் பதித்தார்.

விடாமுயற்சி

அந்தக் காலத்துச் சமுதாயத் தில் பாரடே ஒரு மதிப்புக்குரிய பிரிவைச் சேர்ந்தவராகக் கருதப்படவில்லை. பிரிட்டிஷ் சமூகத்தில் கனவானாக அவர் கருதப்படவில்லை. 1813 முதல் 1815 வரையிலான காலப்பகுதியில் டேவி ஐரோப்பாக் கண்டம் முழுவதும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருந்தார். பாரடேயும் டேவியின்

அறிவியல் உதவியாளராக அப்பயணத்தில் இடம் பெற்றிருந்தார். டேவியின் மனைவி ஜேன் அப்ரீஸ், பாரடேயைத் தங்களுக்குச் சமமாக, நடத்தாமல் வேலைக்காரரைப் போலவே நடத்தி வந்தார். இதனால் பெரிதும் வருந்திய ஃபாரடே அறிவியல் துறையிலிருந்தே விலகிவிடலாம் என்று எண்ணமிட்டார்.

ஆனால் இந்த அவமானத்தைக் கண்டு தளராமல் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவருடைய புத்திக்கூர்மையும், மேதைமையும் விடா முயற்சியும் அவரை டேவியைவிடப் புகழ்பெற்றவராக ஆக்கின.

பாதியிலேயே பள்ளிப்படிப்பைவிட்ட ஃபாரடே தனது விஞ்ஞான ஆர்வத்தாலும், சுய முயற்சியாலும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திச் சாதனை புரிந்தார். மின்னியலில் அவர் கண்டுபிடித்த விஷயங்கள் அவரது ஆய்வுகள், அவற்றைத் தொடர்ந்து பலரும் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் பலன்களை இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One