அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர
அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பள்ளிகளில் 2012ஆம் ஆண்டு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மாதம் தோறும் 7ஆயிரத்து 700 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி 500கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று காலை முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு அங்கேயே தங்கிய அவர்கள் இரண்டாம் நாளான இன்று டிபிஐ வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment