தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், நடுநிலைப்பள்ளி
தலைமையாசிரியர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், 95 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதனால், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப்பள்ளி, ஆறு முதல், 10 வரை உயர்நிலைப்பள்ளியாக பிரிக்கப்படுகிறது. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேறு காலிப்பணியிடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கமாக இருந்தது. சமீப ஆண்டுகளில், அப்பணியிடங்கள் காலியாக இல்லாததால், வேறு இடங்களுக்கு மாற்ற முடியாமல், தரம் இறக்கப்படும் சூழல் நிலவியது. தற்போது, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், தலைமையாசிரியர்கள், அதே உயர்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய விருப்பம் தெரிவித்தால், அதற்கு அனுமதிக்கலாம் என, தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, அதே ஒன்றியத்தில் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால், விருப்ப கடிதம் பெற்று, உயர்நிலைப்பள்ளிகளில் நியமிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment