ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மிகப் பழமையான நூலகத்துக்கு 50 ஆயிரம் நூல்கள், தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் உள்ள 5 நூலகங்களுக்கு 50 ஆயிரம் நூல்கள், 10 ஹிந்து பள்ளிகளுக்கு தலா 500 நூல்கள் என மொத்தம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் நூல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் ஆசிரியர்களைக் கொண்டு காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் மூலம் ரூ. 7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் ஓரிரு நாள்களில் நிறைவடையும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கவும், 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்றார்.

No comments:
Post a Comment