காலாண்டு தேர்வு விடுமுறையில், சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து, அந்தந்த அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், காலாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில், 'ஸ்பீடு' நிறுவனம் மூலம், ஆன்லைன், 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஏற்கனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். அதேநேரம், பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் மாற்றம் உள்ளிட்டவைகளால், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்த, பல தலைமையாசிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் நடத்தக்கூடாது என, மெட்ரிக் பள்ளி இயக்குனர் உத்தரவிட்டதால் குழப்பம் நீடித்தது. இந்நிலையில், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி அனுப்பிய சுற்றறிக்கையில், 'விடுமுறையில், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, உரிய வழிகாட்டுதல்படி, சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment