எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்கள் சமூக சேவை மூலம் தங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி பேச்சு

Thursday, September 27, 2018





புதுக்கோட்டை,செப்.27: நாட்டு நலப்பணித் திட்டத்தில்  ஈடுபட்டுள்ள மாணவர்கள் சமூக சேவை மூலம் தங் கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் கி. வேலுச்சாமி பேசினார்..
   

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி அரசுப் பள்ளியில்  வயலோகம் அரசினர் மேல் நிலைப் பள்ளி  நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களை கொண்டு   பள்ளித்தலைமையாசிரியர் யோ.ஜெயராஜ் தலைமையில் சிறப்பு முகாம்  நடைபெற்றது.

 முகாமில் கலந்து கொண்டு இலுப்பூர்     கல்வி  மாவட்ட துணை ஆய்வாளர் கி. வேலுச்சாமி பேசியதாவது: நாட்டு நலப் பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள  மாணவர்கள் சமூக சேவை மூலம்  தங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்..இந்த  திட்டம்  மாணவர்களுக்கு சமூக  நல் எண்ணங்களை கற்பிக்கவும், எந்த வித பாரபட்சம் இல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்வதற்காக அமைக்கப்பட்டது.. உதவி தேவைப்படுபவர்களுக்கு தக்க நேரத்தில் உதவிபுரிந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இச்சமூகத்தில் ஒரு கௌரவமான வாழ்க்கையை வாழ இத்திட்டத்தில் பணிபுரியும் மாணவர்கள் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும்..ஒரு வாரம் நடக்கும் இம்முகாமில் கலந்து கொண்டுள்ள  மாணவர்கள் தூய்மை செய்தல்,மரம் வளர்ப்பு ,கல்வி மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் போன்ற பணிகளில் ஈடுபட்டு உங்களது சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தி, திறமைகளை வளரத்துக் கொள்ள நல்ல பயிற்சிக் களமாக இந்த முகாமை  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்..
 

 முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் மு.சீனிவாசன், உருவம்பட்டி தலைமையாசிரியர் ஜெ.சாந்தி,இடை நிலை ஆசிரியர் கு.முனியசாமி,
வேப்பங்கனிப்பட்டி ஆசிரியர் இளையராஜா,பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் கருப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்..

   முகாமில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ,
வயலோகம் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..
   முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சி.கணேசன் செய்திருந்தார்.. பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் ராணி நன்றி கூறினார்.

முடிவில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் புகையிலை,மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள்,நெகிழி போன்ற பொருட்களை  வாழ்க்கையில் ஒரு பொழுதும் பயன்படுத்த மாட்டேன் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்..

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One