தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள அய்யம்பட்டியில் காலாண்டு விடுமுறையில் மாணவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவது குறித்த உத்திகளை கற்று வருகின்றனர்.
தேனி மாவட்டம் அய்யம்பட்டி மற்றும் பல்லவராயன்பட்டியில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இவ்விரண்டு ஊர்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் 700- க்கு மேற்பட்ட காளைகள் பங்குபெறும். அதே போல 800-க்கு மேற்பட்ட மாடுபடி வீரர்கள் கலந்து கொள்வார்கள். இதன் காரணமாக அய்யம்பட்டியில் வீடுகள் தோறும் கன்றுகளை வளர்த்து நீச்சல் பயிற்சி, ஓட்டப்பயிற்சி என பலவகையான பயிற்சி கொடுக்கின்றனர். இந்நிலையில், அய்யம்பட்டியில் ஆர்வமுள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு காளைகளை அடக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. செல்லிடப்பேசியில் முகநூல், கட்செவிஅஞ்சல், விளையாட்டு என வீட்டுக்குள்ளே முடங்கி விடுமுறை நாள்களைக் கழிக்கும் மாணவர்களுக்கு மத்தியில், அய்யம்பட்டி அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பலர் இப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பயிற்சியாளர் மற்றும் ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் ஆண்டிச்சாமி கூறியது: கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து பயிற்சி கொடுத்து வருகிறேன். அதே போல, ஆர்வமுள்ள இளம் வீரர்களுக்கு காளைகளை அடக்கும் முறைகள் குறித்து பயிற்சி கொடுத்து வருகிறேன் என்றார்
No comments:
Post a Comment