எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேசிய திறனாய்வுத் தேர்வில் சென்னை மாணவர் முதலிடம்!

Sunday, October 7, 2018


உயர் படிப்புகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வில், தமிழக அளவில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

கடினமான தேர்வாகக் கருதப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் நிலைத் தேர்வு கடந்தாண்டு நவம்பர் 18ஆம் தேதியன்று மாநில அரசால் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாவது கட்டத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்கள் ஆவர். கடந்த மே 13ஆம் தேதியன்று, இது என்சிஇஆர்டியால் நடத்தப்பட்டது.இந்த தேர்வை நாடு முழுவதும் 12 லட்சம் பேர் எழுதினர். இதில், 1,000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 இதில், தமிழ்நாட்டில் பொதுப் பிரிவைச் சேர்ந்த 54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழக அளவில் சென்னையைச் சேர்ந்த ஆதித்யாஎன்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசு சார்பில் ஆராய்ச்சிப் படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பு போன்ற உயர் படிப்புகள், மருத்துவ உயர்படிப்புகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One