எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ராணுவ பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை

Sunday, October 28, 2018




நாடு முழுவதும் உள்ள அனைத்து ராணுவ பள்ளிகளிலும், மாணவியரை சேர்க்க, ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.தற்போது, நாடு முழுவதும், 26 ராணுவ பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ராணுவ கட்டுப்பாட்டுடன் பாடம் நடத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு மட்டுமே, இங்கு சேர்க்கை வழங்கப்படுகிறது.இந்நிலையில், ராணுவ பள்ளிகளில், மாணவியரையும் சேர்ப்பது குறித்து, நீண்ட காலமாக பரிசீலித்து வந்த ராணுவ அமைச்சகம், முதல்கட்டமாக, இந்த ஆண்டு, மாணவியர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது.இதையடுத்து, உத்தர பிரதேச மாநில ராணுவ பள்ளியில், 9ம் வகுப்பில், 15 மாணவியருக்கும், மிசோரமில், ஆறு மாணவியருக்கும் சேர்க்கை வழங்கப்பட்டது.நாடு முழுவதும் உள்ள, அனைத்து ராணுவ பள்ளிகளிலும், மாணவியரை சேர்க்க, ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!