எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கல்லூரி மாணவிகளுக்காக பேருந்து வாங்கிய தம்பதி..!

Wednesday, October 31, 2018


கல்லூரி மாணவிகள் தினசரி பேருந்து வசதி இல்லாமல் சிரமப்படுவதை கண்டு வேதனையடைந்த தம்பதியினர், தங்களது வருங்கால வைப்பு நிதி மூலம் இலவசமாக பேருந்து சேவையினை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இதன்மூலம் மாணவிகள் நிம்மதியாக தங்கள் படிப்பினை தொடர்கின்றனர்.


ராஜஸ்தானை சேர்ந்த குழந்தை நல மருத்துவர் ராமேஸ்வர் பிரசாத் யாதவ். இவர் தனது சொந்த கிராமமான சூரி பகுதிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தனது மனைவியுடன் காரில் சென்றுள்ளார். அவர்கள் கார் சென்ற வழியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 4 இளம் பெண்கள் நின்றுகொண்டிருந்துள்னர். உடேன பிரசாத்தின் மனைவியான தாராவதி அவர்கள் 4 பேரையும் தங்களது காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்களிடம் பேச்சு கொடுத்ததில் அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவிகள் என்பதும், பேருந்துக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்
அத்தோடு மட்டுமின்றி அவர்கள் தாங்கள் சந்தித்து வரும் இன்னல்களை மருத்தவ தம்பதியிடம் கொட்டித் தீர்த்துள்ளனர். அதாவது 18 கி.மீ தொலைவில் உள்ள கல்லூரிக்கு பேருந்தில் செல்ல வேண்டும். ஆனால் பேருந்து ஏற பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும் என்றால் குறைந்த 4 அல்லது 5 கி.மீ நடந்தே செல்ல வேண்டும். அப்படி கஷ்டப்பட்டு நடந்து சென்று பேருந்தில் ஏறினாலும் சில ஆண்களின் தொல்லை தாங்கமுடியவில்லை. இதனை வெளியில் சொன்னால் படித்தது போதும் என வீட்டில் சொல்லிவிடுவார்கள். அத்தனை இடர்பாடுகளையும் தாங்கித்தான் கல்லூரி சென்று வருகிறோம். சில நேரங்களில் பேருந்துகளும் வருவதில்லை. இதனால் எங்களுக்கு போதிய வருகைப்பதிவு கூட கல்லூரியில் இல்லை என ஆதங்கத்தை கொட்டியிருக்கின்றனர்.
இதனைக் கேட்ட பிரசாத் யாதவும் அவரின் மனைவியான தாராவும் மன வேதனை அடைந்துள்ளனர். இந்த குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த இந்த தம்பதி வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுத்து பேருந்து இல்லாமல் சிரமப்படும் கல்லூரி மாணவிகளுக்கு புதிதாக பேருந்து சேவையை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். ரூபாய் 17 லட்சத்தை வருங்கால வைப்பு நிதியில் இருந்து எடுத்த பிரசாத், தான் சேமித்து வைத்திருந்த 2 லட்சம் பணமுடன் மொத்தமாக 19 லட்சம் ரூபாய்க்கு புதிய பேருந்து ஒன்றை வாங்கித் தந்துள்ளார்.
பிரசாத் யாதவ்- தாராவதி தம்பதியின் 6 மாத குழந்தை ஹேமலாதா காய்ச்சலால் 1976-ஆம் ஆண்டு இறந்துள்ளது. அதன்பின் மூன்று ஆண் குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தைகள் இல்லை. ஆனால் ஒரு பெண் குழந்தையாவது வேண்டுமென்ற எண்ணம் பிரசாத் தம்பதியினருக்கு இருந்துகொண்டே இருந்துள்ளது. தற்போது இந்த புதிய பேருந்தை மாணவிகளுக்காக வழங்கியிருப்பதன் மூலம் 50 ஹேமலதாக்கள் தங்களுடன் இருப்பது போன்ற எண்ணம் இருப்பதாக தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தற்போது கிடைத்துள்ள புதிய பேருந்து சேவை மூலம் நிம்மதியாக கல்லூரிக்கு சென்றுவருவதாக கூறும் மாணவிகள் தங்களின் வருகைப்பதிவு அதிகரித்துள்ளதாகவும், பெற்றோர்களும் பயமில்லாமல் கல்லூரிக்கு தங்களை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One