பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
உரை:
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
பழமொழி :
Do not lock the stable door when the horse is gone
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யதே
பொன்மொழி:
சிந்திக்க தெரியாதவர்களுக்கு
கேளிக்கைதான்
சந்தோஷத்தை
அளிக்கக் கூடிய விஷயம்.
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ”பைக்காரா நீர்வீழ்ச்சி”அமைந்துள்ளது?
நீலகிரி
2.புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்” இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
நாக்பூர்
நீதிக்கதை
ஏன் சிரிக்கிறாய் ?
ஒரு பண்ணையில் ஆண் கழுதையொன்றும், பெண் கழுதையொன்றும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை பகலில் கடுமையாக உழைக்கும். பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலை தங்குமிடம் வந்ததும் அங்கு கிடக்கும் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும்.
பெண் கழுதை எந்த வேலையும் பார்ப்பதில்லை. பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி எழும். மிகவும் மகிழ்ச்சியாக, வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது.
ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை வந்து சேர்ந்தது. களைப்பின் மிகுதியால் வந்தவுடனே படுத்தும் விட்டது. ஆண் கழுதையைப் பார்த்து பெண் கழுதை பரிதாபப்பட்டது.
“”உன்னைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது!” என கிண்டல் செய்தது.
“”என்ன செய்வது என் நிலை அப்படி, உழைத்தால் தான் முதலாளி விடுவார்!” என்றது ஆண் கழுதை.
இதைக் கேட்டதும் பெண் கழுதை சிரித்தது.
“”ஏன் சிரிக்கிறாய்?”
“”சிரிக்காமல் என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? நான் மட்டும் கஷ்டப்பட்டு வேலையா செய்கிறேன்!”
ஆண் கழுதை அதை ஆச்சரியத்துடன் பார்த்தது.
“”ஆமாம்… நானும் இதைப் பற்றி உன்னிடம் கேட்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். அதை முதலில் கூறு!”
“”பண்ணையாள் வந்து உன் கயிற்றினை அவிழ்த்து விட்டதும், உடனே நீ வேலை செய்யப் போய் விடுவாய். நான் அப்படிப் போய் விட மாட்டேன்!”
“”பிறகு என்ன செய்வாய்?”
“”அப்படியே படுத்திருப்பேன். நான் எழவில்லை என்றதும் சாட்டையால் நான்கு அடி அடிப்பான். பொறுத்துக் கொண்டு படுத்துக் கொள்வேன். பிறகு என்னை விட்டு விட்டுச் சென்று விடுவான்!” என்றது பெண் கழுதை.
“”இவ்வளவுதானா!” ஆச்சரியமாகக் கேட்டது ஆண் கழுதை.
“”ஆமாம்… நீயும் அதுபோல சண்டித்தனம் செய்து விடு. உன்னையும் பண்ணையாள் விட்டுவிட்டுப் போய் விடுவான். எல்லாம் நம் கையில்தான் உள்ளது!” என அறிவுரை வழங்கியது.
காலைப் பொழுது வேலைக்குச் செல்லும் நேரம் பண்ணையாள் வந்தான். வழக்கம் போல் ஆண் கழுதையைப் பிடித்துக் கொண்டு செல்ல முயன்றான். இன்று ஆண் கழுதை படுத்துக் கொண்டு சண்டித்தனம் செய்தது.
பண்ணையாள் சாட்டை எடுத்து அடித்தும் பார்த்தான். ஆண் கழுதை எழுவதாய்த் தெரியவில்லை. பண்ணையாள் பல விதங்களிலும் முயற்சி செய்து பார்த்து விட்டு, முதலாளியிடம் சென்றான்.
“”அய்யா! இந்த ஆண் கழுதை என்றுமில்லாமல் சண்டித்தனம் செய்கிறது!” என்றான்.
“”சரி பரவாயில்லை. இன்னைக்கு ஆண் கழுதைக்கு ஓய்வு கொடுத்துவிடு. தினமும் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்து சும்மா இருக்கும், அந்தப் பெண் கழுதையை அடித்து இழுத்துப் போ!” என்றார்.
பண்ணையாளும் வந்து ஆண் கழுதை சாப்பிட பசும் புல்லைக் கொண்டு வந்து போட்டான்.
பிறகு, பெண் கழுதையை இழுத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினான். கெட்டதை சொல்லிக் கொடுக்கப் போய் தன்னுடைய பிழைப்பே போய் விட்டதை எண்ணி மிகவும் வருந்தியது பெண் கழுதை.
இன்றைய செய்தி துளிகள்:
1.டெல்டாவில் கஜா கோரத்தாண்டவம் உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி 6வது நாளாக மக்கள் கடும் அவதி
2.கடையநல்லூரைச் சேர்ந்த துவக்கப் பள்ளி மாணவர்கள் தங்கள் பாக்கெட் மணியை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
3.டெல்டா மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்
4. 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
5.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி
No comments:
Post a Comment