எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இந்தியாவின் 9 மொழிகளுக்கு பாதுகாப்பு நிலையத்தை வழங்கும் கூகுள்

Thursday, November 22, 2018


ஆன்லைனில் பாதுகாப்பாக பயனாளிகல்
பயன்படுத்தும் அதிகாரம் அளிப்பதற்கான நோக்கத்துடன், இந்தியாவில் புதிதாக விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தை கூகுள் உருவெடுத்துள்ளது, பயனர்கள் தங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நிர்வகிப்பதன் மூலம் இணையத்தை சிறப்பான முறையில் நிர்வகிக்க உதவும் வகையில் கூகுள் வடிவமைத்துள்ளது.

இந்தியாவில் அமைக்கப்படும் புதிய பாதுகாப்பு மையம் இங்குள்ள பயனர்கள் பல்வேறு பாதுகாப்பு கருவிகளையும், அடிப்படை பாதுகாப்பு வழிகாட்டல்களில் இருந்து, தரவு பாதுகாப்பு, தனியுரிமை கட்டுப்பாடுகள், மற்றும் இணையத்தில் குடும்ப மற்றும் நட்பு வட்டாரத்தினை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான உதவிக்குறிப்புகள் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றிய தகவல்களுக்கு பரந்த அளவிலான கருவிகள் மற்றும் ஆதாரங்களை கூகுள் தற்போது வழங்கியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் புரொடக்ட் மேனேஜ்மெண்ட் டைரக்டர் மார்க் ரிஷர் இதுகுறித்து கூறியபோது, "கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் பல டூல்ஸ்களை பயனர்களுக்காக உருவாக்கி அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். அந்த வகையில் தற்போது கூகுளின் பாதுகாப்பு அமைப்பு, கூகுள் சேவைகளில் அவற்றின் தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும், ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கு அவற்றிற்கு அதிகாரம் அளிப்பதாகவும் உள்ளது.
இந்த புதிய சேவை இந்தியாவில் உள்ள மேலும் ஒன்பது மொழிகளுக்கு வழங்கப்படவுள்ளது. அவை இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகள் ஆகும்.

இன்றைய இந்தியா உலகில் இண்டர்நெட் அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே இதுபோன்ற ஒருசில வசதிகள் கொடுத்து ஸ்மார்ட்பொன்களில் டேட்டா பயன்பாட்டை இன்னும் அதிகப்படுத்த முடியும் என கூகுள் நிறுவனத்தின் டிரஸ்ட் அண்ட் சேஃப்டி இயக்குனர் சுனிதா மொஹந்தி அவர்கள் கூறியுள்ளார்.

மொஹந்தி இதுகுறித்து மேலும் கூறுகையில், "இணையம் எல்லோருக்கும் வாழ்க்கையை எளிதாகவும் சுலபமாகவும் மாற்றுவதோடு அனைத்து வயதினர்களுக்கும் உதவும் வகையில் உள்ளது. ஆன்லைன் பயனர்கள் அல்லது முதல் தடவையாக ஆன்லைனில் வருபவர்களிடையே ஆராய்ந்து, உருவாக்குவதற்கும், ஒத்துழைப்பதற்கும் பல வாய்ப்புகளை வழங்குகிறது, சாத்தியமான எதிர்மறை அனுபவங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் இணையத்தில் அவை பாதிக்கப்படுவதால், இது பயனர்களுக்கு பல தகவல்களை கற்று கொடுப்பதோடு, இணையத்த்ல் உலாவும்போது அவை வெளிப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் அச்சுறுத்தல்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் இணையத்தின் தரவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பல கருவிகள் ஆன்லைனில் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவேதான் கூகுள் நிறுவனம் பாதுகாப்பாகவும், தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கவும் கூகுள் அக்கவுண்ட் மூலம் பல டூல்ஸ்களை கொடுத்து வருகிறது. பிரைவைட் செக்கப், மை ஆக்டிவிட்டி ஆகியவை பயனர்கள் தங்களுடைய தேவையை, டேட்டா அளவை சரிசெய்து கொள்ள இந்த கூகுள் அக்கவுண்ட் உதவுகிறது.

அதேபோல் கூகிள் குடும்ப பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு என இரட்டிப்பு பாதுகாப்பை வழங்குகிறது.. ஃபேமிலி லிங்க் செயலியானது பெற்றோர்களால் டிஜிட்டல் செட் செய்யப்பட்டு அவர்களே மேனேஜ் செய்வதால் குடும்பத்தில் உள்ளவர்களின் கூகுள் அக்கவுண்ட், அவர்களுடைய சாதனம் மற்றும் செயலிகளுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கின்றது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One