நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மக்களுக்கு வித்தியாசமான உதவியை செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
சமுத்திரக்கனி உதவி:
தமிழ் சினிமாவில் சில நடிகர்கள், இயக்குனர்களை பார்க்கும் போது நமது உறவினர்கள் அல்லது நமது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் அண்டை வீட்டுகாரர் போல் தோன்றும். காரணம், அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள்.
அந்த கதாபாத்திரங்களில் நடிப்பது போல் இல்லாமல் வாழ்ந்தவர்கள் போலவே அவர்கள் இருப்பார்கள். இப்படி, தான் எடுத்து நடிக்கும் ரோல்களில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு, இந்த ரோலை இவரைத்தவிர யார் நடித்தாலும் இப்படி இருந்திருக்க முடியாது என பெயரை வாங்கியவர், நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி.
இவர் இயக்கும் படங்களும் சரி, இவரின் பேச்சுக்களும் சரி பொதுமக்களின் மனதை ஏதாவது ஒருவகையில் தொட்டுவிடும். அப்பா, நிமிர்ந்து நில் போன்ற படங்கள் அதற்கு சான்று. இவரின் படங்கள் தான் இப்படி இருக்கும் என்றால் , டெல்டா மக்களுக்கு இவர் செய்த உதவியும் இதயத்தை தொட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களாக தமிழகத்தை உலுக்கிய எடுத்த கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் வாழ்வாரத்தை இழந்துள்ளனர்.
குறிப்பாக கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. அவர்களுக்கு தமிழகமெங்குமிலிருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
பிரபலங்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள் என பலரும் பல்வேறு உதவிகளை செய்து டெல்டா மாவட்ட மக்களை துயரத்தில் இருந்து மீட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் புயல் காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
நிலை சரிந்து கீழே விழுந்துள்ள மின்கம்பிகளை சரிசெய்யும் பணி முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது. இதனிடையில் மின்சாரம் இன்றில் தவித்து வரும் டெல்டா மக்களுக்கு சமுத்திரக்கனி ஜெனரேட்டர் கொடுத்து உதவியுள்ளார்.
ஏனென்றால் மின்சாரம் இல்லாமல் மக்கள் தங்கள் செல்போனுக்கு சார்ஜ் போட முடியவில்லை. செல்போனுக்கு சார்ஜ் போட்டால் தான் தங்கள் ஊருக்கு என்ன தேவைபடுகிறது என்று அவர்களால் வெளி மக்களுக்கு சொல்ல முடியும். இந்த பிரச்சனையால் மக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். இதனை சரிசெய்யும் விதமாக சமுத்திரக்கனி ஜெனரேட்டர் வாங்கி அனுப்பி வைத்துள்ளார்.
சமுத்திரக்கனியின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஜெனரேட்டர் தங்களுக்கு பெரும் உதவியாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்
வாழ்க வளமுடன் உம் மனித நேய இதயம்
ReplyDeleteதனி சிந்தனை
ReplyDeleteதனி செயல்பாடு
வாழ்த்துக்கள்
Congrats for ur humanity
ReplyDeleteநல்ல சிந்தனை தோழர்
ReplyDeleteஉண்மையில் இவர்தான் சிறந்த மனிதர்
ReplyDeleteநல்ல சிந்தனை
ReplyDeleteவாழ்த்துக்கள் sir
ReplyDeleteExcellent
ReplyDeleteநல்லதொரு உதவி நலமான உதவி
ReplyDeleteநாட்டிலே இவரைப் போல்
நல்ல மனிதர் இருப்பதாலே
நாநிலமே இயங்குதய்யா !
Great sir
ReplyDeleteSalute sir
ReplyDeleteWe salute u aptly done
ReplyDeleteநல்ல உதவி
ReplyDeleteநல்ல மனிதன்
Excellent
ReplyDelete