எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து புயல் நிவாரண நிதி திரட்டும் இளைஞர்

Friday, November 23, 2018


கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலியில் கல்லூரி மாணவர்களின் காலணிகளைச் சுத்தம் செய்து நிதி திரட்டுகிறார், பாளையங்கோட்டை சாந்தி நகரில் வசிக்கும் இளைஞர் பா.பாப்புராஜ். இந்தியாவில் எந்தப் பகுதியில் இயற்கை பேரிடர் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டாலும் திருநெல்வேலியில் உள்ள அன்னை தெரசா நண்பர்கள் குழு நிதி திரட்டி அளித்து வருகிறது. இதற்காக வித்தியாசமான முயற்சிகளை இந்த குழுவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பா.பாப்புராஜ் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட போது, திருநெல்வேலியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களைச் சுத்தம் செய்து கொடுத்து நிதி சேகரித்து, ஆட்சியர் மூலம் அனுப்பி வைத்தார். தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்க ளுக்கு வழங்க, ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று வாசலில் அமர்ந்து மாணவர்களின் காலணிகளைச் சுத்தம் செய்து கொடுத்து நிதி சேகரித்து வருகிறார். கஜா புயல் சேதங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த புகைப்படங்கள், செய்திகளை பெரிய அட்டையில் ஒட்டி அதை தன்னருகில் வைத்துக்கொள்கிறார். மாணவர்கள் மத்தியில் கஜா புயலின் பாதிப்பு குறித்தும், மக்கள் படும் வேதனைகள் பற்றியும் சொல்லி நிதி சேகரிக்கிறார். இதற்காக மாணவர்களின் காலணிகளைச் சுத்தம் செய்து அளிக்கிறார். தினமும் 2 மணிநேரம் இதுகுறித்து பாப்புராஜ் கூறிய தாவது: கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து மிகுந்த வேதனை அடைந்தேன். அங்குள்ள சகோதர, சகோதரி களுக்காக நிவாரண நிதி திரட்ட திட்டமிட்டேன். அதன்படி கடந்த 19-ம் தேதி யிலிருந்து வரும் 26-ம் தேதி வரை தினமும் 2 மணிநேரம் திருநெல்வேலியில் உள்ள ஒவ்வொரு கல்லூரி வாசலிலும் அமர்ந்து மாணவர்களின் காலணிகளைச் சுத்தம் செய்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளேன். இதுவரை 2 கல்லூரிகளில் நிதி திரட்டி யுள்ளேன். மற்ற கல்லூரிகளிலும் நிதி திரட்டி நேரடியாக டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உதவ உள்ளேன்” என்றார் அவர். பலமுறை உதவியவர் ஏற்கெனவே இவர் குஜராத் பூகம்பம், சுனாமி பேரழிவு, இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக செருப்பு துடைத்து நிதி திரட்டி அளித்திருக்கிறார். தானே புயல் பாதிப்பின்போது திருநெல்வேலியில் கார்களை சுத்தம் செய்து நிதி திரட்டினார்.

 ஒரிசா புயல் வெள்ள பாதிப்பின்போது வெள்ள நிவாரண நிதி திரட்ட டீ விற்றிருக்கிறார்.கடந்த 19-ம் தேதியிலிருந்து வரும் 26-ம் தேதி வரை தினமும் 2 மணிநேரம் திருநெல்வேலியில் உள்ள ஒவ்வொரு கல்லூரி வாசலிலும் அமர்ந்து மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One