கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் பி.கே.இளமாறன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:-
கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளுக்கு ஆசிரியர்களின் பங்கும் இருந்திடும் வகையில் வாழ்வாதாரத்தினை இழந்து வாடும் மக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் ஒருநாள் ஊதியத்தினை வழங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துகள்
ReplyDeleteநட்பின் வழியில்
சோலச்சி
வாழ்த்துகள்
ReplyDeleteநட்பின் வழியில்
சோலச்சி
அரசாங்க வரிப்பணம் அனைத்தையும் ஆளுங்கட்சி சுருட்டி கொண்டு போய் விடும். கோடிக்கணக்கான பணம் ஊழல் என்ற அறிவிப்பை மட்டுமே பார்க்க முடிகிறது.பேரிடர் வந்தால் அப்பிராணி ஆசிரியர் தங்கள் உழைத்த பணம் கொடுக்க வேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்?
ReplyDeleteSir!Mazhail konjam nanaiyungal Ungal manadhil konjam Eeram Varatum
ReplyDelete