எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அறிவியல்-அறிவோம்: வலி நிவாரண மருந்துகளும் ஆபத்துகளும்

Wednesday, November 28, 2018


அறிவியல்-அறிவோம்: வலி நிவாரண மருந்துகளும் ஆபத்துகளும்

(S.Harinarayanan, GHSS Thachampet)


எதற்கெடுத்தாலும் வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகளுக்கு உட்படுவதை யாருமே பொருட்படுத்துவதாகயில்லை. இதன் விளைவு சிறிய வயதிலேயே சிறுநீரக செயலிழப்பு போன்ற கொடிய வியாதிகளில் மாட்டிக்கொண்டு உயிரை தொலைக்கும் அபாயம் நேர்கிறது. பெரும்பாலான வலி நிவாரண மாத்திரைகள் உங்கள் வயிற்று பகுதியின் உள்ளே உள்ள மெல்லிய சவ்வு போன்ற பகுதிகளில் ரணத்தை உண்டாக்கி வயிற்று புண்களை ஏற்படுத்திவிடுகிறது.  இதற்கும் நம்மவர்கள் கூடவே gelusil ஆரஞ்சு/பிங்க் மருத்துகளை ஒரு மூடியை குடித்துவிட்டு தூங்கச்செல்லுவதை வாடிக்கையாக்கிக் வைத்து இருப்பார்கள். 

 நம் உடல் கட்டமைப்பில் வியக்கும் வண்ணம் அமைந்த பகுதி மூளையாகும். நாம் மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டம் என்ற பகுதியும் இன்னும் சில பகுதிகளும் நம் உடம்பில் வலிகள் ஏற்படும் பொழுது வலியை குணப்படுத்த சில வலி நிவாரண வேதியல் காரணிகளை(அதாவது ஹோர்மோன்) சுரக்கிறது. இதனை ஓபியாட்ஸ் (opiods) என்று மருத்துவ உலகம் கூறும். இது சுரந்து வலியுள்ள பகுதியை கண்டறிந்து குணப்படுத்த நமக்கு தேவை பொறுமை. சுரந்த வலி நிவாரணம் வலி இருக்கும் இடத்தை வந்து சேர எடுக்கும் கால அளவு வரை யாருக்குமே பொறுமை இருப்பதில்லை.  இயற்கையாகவே வலியை குறைக்கும் ஆற்றல் நமது உடலுக்கு இருப்பதை மறந்துவிடுகிறோம்.

இப்போதைய தலைமுறையினர் பயன்படுத்தும் வலிநிவாரணிகளில் ஸ்டீராய்ட் அல்லாதவற்றிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இருந்தாலும்இத்தகைய வலி நிவாரணிகளை பயன்படுத்துவோர்களுக்கு atrial fibrillation எனப்படும் இயல்பற்ற இதயத்துடிப்பு அல்லது சீரற்ற இதயத்துடிப்பு உருவாகிறது என்றும், இதனால் பாதிக்கப்படுபவர்கள் 40 சதவீதத்தினர் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட சிறுநீரகத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரூமாட்டாய்ட் ஆர்த்தரைடீஸால்(Rheumatoid arthritis)  பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

இத்தகைய வலி நிவாரணிகளை பயன்படுத்தும் போது உடலில் உள்ள கல்லீரல், சிறுநீரகத்தின் நச்சு நீக்கப் பணியின் சுமை அரிகரிக்கிறது. ஏற்கனவே முதுமையின் காரணமாக இவற்றின் பணி குறைந்திருக்கும். இந்நிலையில் இத்தகைய வலி நிவாரணிகள் உடலில் சேர்வதால் இதனை வெளியேற்றும் பொறுப்பும் இவற்றிற்கு ஏற்படுகிறது. இதனால் இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டு இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் உருவாகுவதற்கு வழிஏற்படுகிறது.

வலியின் காரணியை குணப்படுத்துவோம்:

எல்லா வலிகளுக்கும் அடிப்படையாக ஒரு மூலக்காரணம் இருக்கும். அந்த வலி, எதாவது ஒரு காயம் அல்லது கோளாறினால் உண்டானதாக இருக்கும். மேலும், வலி என்பது ஒரு அறிகுறி தான். ஆகவே, வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்தி தற்காலிக நிவாரணம் பெறுவதைக் காட்டிலும், சரியான நிபுணரிடம் சென்று, வலிக்கான மூலம் என்ன என்பதை தெரிந்து, அதற்கேற்ற சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதால், வலி நிரந்தரமாக உங்களை விட்டு போகும்.

வலியை கொன்று உயிரை எடுக்கும் வலி நிவாரணிகள்:

வலியைக் கொல்லும் மருந்துகள் என்ற அர்த்தத்திலேயே Pain killer என்கிறோம். இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. Opioid analgesics என்கிற வலி நிவாரணிகளை மருத்துவரே பரிந்துரைப்பார். பெரிய மருந்துக்கடைகளில், மருந்துச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்க முடியும் என்பதால், இதனால் பெரும்பாலும் பிரச்னைகள் ஏற்படுவது இல்லை. ஆனால், மருந்துக்கடைகளில் மக்கள் நேரடியாக வாங்கும் வலி நிவாரணிகளான Non Steroidal Anti Inflammatory Drugs (NSAID) வகைதான் பிரச்னைகளை உருவாக்குகின்றன. 

தவிர்த்திடுங்கள்:
மருத்துவரால் பரிந்துரைக்கப்படாமல், நீங்கள் சுயமாக மருந்து கடைகளில் இருந்து எந்த ஒரு மருந்தையும் வாங்கி பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம். இது ஒரு ஆபத்தான பழக்கமாகும். குறிப்பாக வலி மாத்திரைகளை , மருத்துவர் பரிந்துரைக்காமல் எடுத்துக் கொள்ளும் போது, அது இறப்பிற்கும் வழிவகுக்கலாம். ஆகவே, உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத வலி இருக்கும்போது, மருத்துவரிடம் சென்று உங்கள் வலியின் ஆழத்திற்கு ஏற்ற மருந்தை பரிந்துரைக்க செய்து, அதனை வாங்கி உண்ணலாம்.

வலி நிவாரணி மாத்திரையை சாப்பிட்டால் 24 ஆண்டு சிறைத்தண்டனை:

நம்மூரில் சாதாரணமாக கிடைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை துபாயில் உட்கொண்டால் 24 ஆண்டுகள் அதாவது ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
துபாய் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான வலி நிவாரணி மாத்திரைகள் தடை செய்யப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One