எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களின் உத்தரவின்படி நீட் தேர்விற்கு தகுதியான மாணவர்களை ஆன்லைன் மூலம் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும்

Thursday, November 29, 2018


பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களின் உத்தரவின்படி நீட் தேர்விற்கு தகுதியான மாணவர்களை ஆன்லைன் மூலம் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா அறிவுறுத்தல்.

   புதுக்கோட்டை,நவ,29-           புதுக்கோட்டை மாவட்டத்தில்   உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் நீட்,ஜே.இ.இ எழுத தகுதியுள்ள அனைத்து மாணவர்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது சம்பந்தமாக மேல்நிலைப்பள்ளிகளின்  தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமைதாங்கி பேசும்போது கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களின் உத்தரவின்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் நீட்,ஜே.இ.இ தேர்வு எழுத தகுதியுள்ள அனைத்து மாணவர்களையும் இன்றைக்குள்29-11-2018(வியாழக்கிழமை)ஆன்லைன் மூலம் உடனடியாக பதிவேற்றம் செய்து அறிக்கையினை முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு  வழங்கிடவேண்டும். நீட்,ஜே.இ.இ தேர்வு எழுதும் மாணவர்களின் நலன்கருதி தலைமையாசிரியர்கள் இதில் தனிக்கவனம் செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்..

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One