எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கல்வி மாவட்ட அளவிலான புதிர் போட்டிகள்

Thursday, November 29, 2018


புதுக்கோட்டையில் கல்வி மாவட்ட அளவிலான புதிர் போட்டிகள்...

புதுக்கோட்டை,நவ.29 : புதுகோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர்களுக்கான புதிர் போட்டிகள் கல்வி மாவட்ட வாரியாக நடைபெற்றது...

புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியினை முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்துப் பேசியதாவது: மாணவர்களின் நுட்பமான அறிவு திறனை வெளிப்படுத்துவதற்காக இம்மாதிரியான புதிர்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன...போட்டித் தேர்வுகளை நீங்கள் எழுதும் காலத்தில் இப்போட்டிகளின் மூலம் ஏற்படும் பயிற்சி சிறந்த பயன்தரும்..இயற்கை பேரிடர்களை பொருட்படுத்தாது கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்..இம்மாதிரி போட்டிகளில் கலந்து கொள்வதே வெற்றி தான்..எனவே நீங்கள் அனைவரும் சிறந்த முறையில் புதிர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்..

புதுக்கோட்டையில்  நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாமலை ரஞ்சன் வாழ்த்திப் பேசினார்..அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வம் தொடங்கி வைத்தார்..இலுப்பூர் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளை குணசேகரன் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 25 பள்ளிகளிலிருந்து 100 மாணவர்களும்,அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 45 பள்ளிகளில் 180 மாணவர்களும் ,இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 35 பள்ளிகளில் 140 மாணவர்களும் கலந்து கொண்டனர்..

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் செம்பாட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும்,கிழாநிலைக்கோட்டை அய்யாக்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாமிடத்தினையும் பெற்றனர்.அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும்,வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாமிடத்தையும் பிடித்தனர்..இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் எண்ணை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும்,லெக்கணப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாமிடத்தினையும் பிடித்தனர்..

மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற அணிகள்  டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்ச்செல்வம்,ராஜா  செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One