தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில், 'டெட்' தகுதி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கடந்தாண்டு ஏப்ரல் , இறுதியில் நடந்தது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாகியும், பணிவாய்ப்பு குறித்த அறிவிப்பு இல்லை. இதனால் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.புது உற்சாகம்!டெட் தேர்வுக்குப் பின், பிரத்யேக போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி கிடைக்கும் என, சமீபத்தில் அமைச்சர் தெரிவித்தார். இது, டெட் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், வேறு வழியின்றி போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடம் திரட்ட, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். சோர்ந்திருந்த டெட் தேர்வர்கள் மத்தியில், இந்த அறிவிப்பு புது உற்சாகத்தை அளித்துள்ளது.நியமனம் நடத்த வேண்டும்டெட் தேர்வர்கள் சிலர் கூறுகையில்,'தமிழகத்தில் 2013க்குப் பின், கடந்தாண்டு தான் டெட் தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணிவாய்ப்பு குறித்து அரசு மவுனம் சாதிக்கிறது. 'காலிப்பணியிட விபரத்தையும் வெளியிட மறுக்கின்றனர். முதுகலை ஆசிரியர் காலியிடங்களுக்கும், தேர்வு அறிவிப்பு இல்லை. அப்புறம் ஏன் தகுதித்தேர்வு நடத்த வேண்டும்? தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில், தகுதியுள்ளோரை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை 'TNTET Exam-ல் ' தகுதி பெற்றவர்களை நியமிக்க கோரிக்கை
Thursday, November 22, 2018
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில், 'டெட்' தகுதி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கடந்தாண்டு ஏப்ரல் , இறுதியில் நடந்தது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாகியும், பணிவாய்ப்பு குறித்த அறிவிப்பு இல்லை. இதனால் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.புது உற்சாகம்!டெட் தேர்வுக்குப் பின், பிரத்யேக போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி கிடைக்கும் என, சமீபத்தில் அமைச்சர் தெரிவித்தார். இது, டெட் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், வேறு வழியின்றி போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடம் திரட்ட, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். சோர்ந்திருந்த டெட் தேர்வர்கள் மத்தியில், இந்த அறிவிப்பு புது உற்சாகத்தை அளித்துள்ளது.நியமனம் நடத்த வேண்டும்டெட் தேர்வர்கள் சிலர் கூறுகையில்,'தமிழகத்தில் 2013க்குப் பின், கடந்தாண்டு தான் டெட் தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணிவாய்ப்பு குறித்து அரசு மவுனம் சாதிக்கிறது. 'காலிப்பணியிட விபரத்தையும் வெளியிட மறுக்கின்றனர். முதுகலை ஆசிரியர் காலியிடங்களுக்கும், தேர்வு அறிவிப்பு இல்லை. அப்புறம் ஏன் தகுதித்தேர்வு நடத்த வேண்டும்? தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில், தகுதியுள்ளோரை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment