எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 07-01-2019

Sunday, January 6, 2019


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 113

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

உரை:
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

பழமொழி:

Forgive and forget

மன்னிப்போம், மறப்போம்

பொன்மொழி:

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல
செயல்கள் எதையும் செய்ய முடியாது.

-ஜேம்ஸ் ஆலன்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) நமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா?

தேசிய விழா

2)ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது?

டாக்டர்.இராதாகிருஷ்ணன்

நீதிக்கதை :

நட்புக்குத் துரோகம் 

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதாவது நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன.

ஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக கழுதையின் இருப்பிடத்தை நோக்கிச் அந்த அடர்ந்த காட்டின் வழியே சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், சிங்கம் ஒன்று அந்த நரியினை வழி மறித்தது. சிங்கத்தைக் கண்டு அந்த நரி நடுங்கியது. எப்படியாவது உயிர்தப்ப வழியுண்டா என யோசித்தது.

நரி உடனே சிங்கத்தை நோக்கி, "மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் கழுதை, இரண்டு மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும்!" என்று கூறிற்று.

அந்த ஏற்பாட்டுக்கு சிங்கம் ஒப்புக் கொண்டது.

நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது.

"நண்பனே! இரை தேடச் செல்லலாமா?'' என, கழுதையை அழைத்துக்கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்தது.

கழுதையை, சிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தியது நரி. சிங்கம், கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது.

நரி பதறிப் போய், "மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!'' என்று நரி நடுக்கத்துடன் கேட்டது.

"நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்ப முடியாது. நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம். ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது'' என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது.


நீதி: கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்கு தீமை தான் ஏற்படும்.


இன்றைய செய்தி துளிகள் : 

1) 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து!

2) கேட் நுழைவுத் தேர்வில் 11 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு : தமிழகத்தில் 2 பேர் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை

3) பிளஸ் 1ல் இடைநின்ற மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத கட்டுப்பாடு

4) கல்வித் தொலைக்காட்சி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

5) இந்தியன் புரோ கபடி லீக் : சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி

3 comments

  1. Sir please send me 1 to 4 III rd term 2nd weak lesson plan

    ReplyDelete
  2. Very useful for your all messages thank you

    ReplyDelete
  3. Sir please send me 1 to 4 III rd term 2nd weak lesson plan

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One