எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

'1,000 அரசு ஆசிரியர்கள் பணியிழக்கும் அபாயம்!'

Sunday, January 6, 2019




'தமிழகத்தில், 1,000 அரசு ஆசிரியர்கள் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, சிறப்பு தகுதித் தேர்வை, அரசு நடத்த வேண்டும்' என, பா.ம.க., இளைஞர் அணித்தலைவர், அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், 1,000 ஆசிரியர்கள், செய்யாத தவறுக்காக, வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அதேபோல், தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 30 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களுக்கும், இதே நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், இவர்கள் இளநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெறாமல் உள்ளனர். அவர்கள், மார்ச், 31க்குள் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில், வேலை இழப்பது உறுதி. தனியார் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க, முறையான கட்டமைப்பு இல்லாததால், அவர்களுக்கு உடனடியாக பணி நீக்க ஆபத்து இல்லை.
இதை தடுக்கும் பொறுப்பு, மாநில அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து, பணி இழக்கும் அரசு ஆசிரியர்களுக்கு மட்டும், சிறப்பு தகுதி தேர்வு நடத்தி, உடனடியாக முடிவுகளை அறிவிக்க வேண்டும். ஒருவேளை, அது சாத்தியமில்லை என்றால், தகுதித் தேர்வில், ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை, மேலும் சில ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One