எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

'யு டியூப்'பில் பாடம் படிக்கலாம்

Sunday, January 6, 2019




'சிறந்த ஆசிரியர்களை பாடம் நடத்த வைத்து, அதை படம் பிடித்து, 'யு டியூப்'பில் பதிவேற்றம் செய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

அமைச்சர், செங்கோட்டையன்:

பதிப்பகங்களில் இருந்து, புதிய நுால்கள் வாங்க, குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய நுால்களை கொள்முதல் செய்ய, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா நுாற்றாண்டு நுாலகத்திற்கு நுால்கள் வாங்க, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, ஸ்டுடியோவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த ஸ்டுடியோவில், சிறந்த ஆசிரியர்களை பயன்படுத்தி பாடம் நடத்தி, அதை வீடியோவில் பதிவு செய்து, 'யு டியூப்' வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய, முடிவு செய்துள்ளோம்.பள்ளி மாணவர்கள், தங்கள் மொபைல் போன்களில், அவற்றை பதிவிறக்கம் செய்து படிக்கலாம். 'சிடி'யாக வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.அதேபோல், ஓலைச்சுவடிகளில் உள்ளதை, புத்தகமாகவும், 'சிடி'யாகவும் வெளியிட, நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.
மதுரையில், 5 கோடி ரூபாய் மதிப்பில், தமிழன்னை சிலை அமைக்கப்படவுள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One