எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிக் கல்வித் துறை நிர்வாக சீர்திருத்த தகவல்கள் உண்மையா? வதந்தியா?

Friday, January 4, 2019




2019-20 ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கக்கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கப்படுகிறது.

3 முதல் 5 கி மீ சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளோடு இணைக்கப்படுகிறது.

தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதி ஆகின்றன.(DEEO post ஒழிக்கப்பட்டது போல்)

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாற்றம் செய்யப்படக் கூடும்.

படிப்படியாக தொடக்கப் பள்ளி தலைமை  ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக் உட்படுத்தப்படுவர்
.(காலிப்பணியிடத்திற்கு ஏற்ப, பட்டதாரி பணியிடத்திற்கு ஏற்ப தகுதி மற்றும் பதிவு மூப்பு இருப்பின்)

மீதம் உள்ளவர் நிலை இறக்கம் செய்யப்படலாம்.

 ஆனால் தற்போது பெறும் ஊதியத்தில் மாற்றம் இராது.

அனைவரின் முன்னுரிமையும் மாநில அளவில் பேணப்பட உள்ளதாக தெரிகிறது.

BEO க்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட உள்ளனர்.

BE0 பணியிடங்களில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

BEO அலுவலகம் பார்வை மற்றும் ஆய்வு அலுவலகமாக் மாற்றப்படுகிறது.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நீக்கப்படக் கூடும்.

உதவி பெறும் பள்ளிகளுக்கு 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் தான், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

தலைமை ஆசிரியர் பதவி

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே இருப்பர்.

உதவி ஆசிரியர்கள் வகை:

இடைநிலை ஆசிரியர்,  பட்டதாரிஆசிரியர்,முதுகலை ஆசிரியர்

ஆகிய வகைகள் மட்டுமே


அனைத்து ஆசிரியர்களும், அமைச்சுப் பணியாளர்களும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளனர்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் இனி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே.

வட்டாரத்தை கவனிக்க BE0

கல்வி மாவட் டத்தை கவனிக்க DE0

மாவட்ட கல்வி நிர்வாகத்தை கவனிக்க CEO

மேற்கண்டோரின் பணியை மேற்பார்வையிட, 1 அல்லது 2 மாவட்டத்திற்கு ஒரு Jd

இதனை கண்காணிக்க, மண்டல வாரியாக (சுமார்5 அல்லது 6 மாவட்டங்கள்) இயக்குநர்

என்ற வகையில் கண்காணிப்பு வளையம் இருக்கும் என கூறப்படுகிறது.

பள்ளிக் கல்வி இயக்குநர் மட்டுமே, பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இருப்பார்.

 பிற இயக்குநர்கள் மண்டல இயக்குநர்களாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டல அலுவலகத்தில் பணியாற்றுவர் எனவும் கூறப்படுகிறது.

இவை அனைத்தும் வாட்ஸ் அப் பகிர்வுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை. அரசாணை நடைமுறைக்கு வந்தால் தான், உண்மையான மாற்றங்கள் என்னவென்று தெரிய வரும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One