எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிகள் இணைப்பால் நிரவலாகும் உபரி ஆசிரியர்கள்

Friday, January 4, 2019




தொடக்க பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுடன் இணைப்பதால், வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் வீதம் உபரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 358 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 2,947 மேல்நிலை; 3,118 உயர்நிலை; 31 ஆயிரத்து 293 தொடக்க, நடுநிலை பள்ளிகள் உள்ளன.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வி தரத்தை உயர்த்தவும் தொடக்க பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்க கல்வி துறை திட்டமிட்டுள்ளது.3,133 பள்ளிகள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன் மூலம் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையில் ஒரே பள்ளியில் படிக்க முடியும். வரும் ஜூனில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆசிரியர் ஒருவர் கூறும்போது

தற்போது கிராமங்களில் பெரும்பாலான தொடக்க பள்ளிகள் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளாக இயங்கி வருகின்றன.

இணைப்பின் மூலம் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்க பள்ளிகளில் வகுப்பு எடுக்க வாய்ப்பு உள்ளது.கற்றல், கற்பித்தல் திறன் மேம்படும். பெற்றோர்கள் அரசு பள்ளியை நாடி வருவார்கள்.

கிராமப்புறங்களை மையப்படுத்தியே தொடக்க பள்ளிகள் அமைந்துள்ளன. இணைப்பின் மூலம் பள்ளிகளுக்கு இடையேயான துாரம் அதிகரிக்கும்.

ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை ஒரே தலைமை ஆசிரியர் கீழ் வருவதால், உயர்கல்வியில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இவற்றையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One