'உங்க புள்ளய கவர்ன்மென்ட் ஸ்கூல்ல சேர்த்தா என்ன.?' என்று சொல்ல கேட்டாலே, ஒரு ஏளன பார்வையும், கோபமும் மேலோங்கும். ஏனெனில் கவர்ன்மென்ட் ஸ்கூல்களில் படிக்கும் மாணவர்கள் சதா சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், சரியாக படிக்க மாட்டார்கள், ஸ்கூலை கட் அடித்து விட்டு வெளியே சுத்துவார்கள், இப்படி பல வகையான பிரமைகள் நம் மத்தியில் உள்ளது. அப்போ ப்ரைவேட் ஸ்கூல்ல படித்த நாமெல்லாம், வாழ்நாளில் கெட்ட வார்த்தைகளே பேசியது இல்லையா.? ப்ரீட்சையில் பெயில் ஆனதே இல்லையா.? ஸ்கூலை கட் அடித்து விட்டு சினிமா, பீச் போனது இல்லையா.?
வாய் வார்த்தையாக சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள்.!
ஒரு மாணவனின் வாழ்க்கை தரமானது, அவன்/ அவள் படிக்கும் ப்ரைவேட் அல்லது கவர்ன்மென்ட் ஸ்கூலில் இல்லை அவரவர் கைகளில் தான் உள்ளது. இதை எல்லாம் வெறும் வாய் வார்த்தையாக சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள் என்பது, கரூரை சேர்ந்த அரசாங்க பள்ளி மாணவரான ஹரிஹரனுக்கு நன்றாக புரிந்து விட்டது போலும். அதனால் அவன் சாதித்து காட்டி விட்டான்; அப்படி என்ன சாதித்தான்.?
ஜப்பான்-ஆசியா யூத் எக்ஸ்சேன்ஞ் திட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.!
16 வது நிரம்பிய 'கவன்மெண்ட் ஸ்கூல்' மாணவரான எம்.ஹரிஹரன், அவரின் அறிவியல் மற்றும் விஞ்ஞான அறிவு மற்றும் பேரார்வத்தின் விளைவாக ஜப்பானில் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளை சந்திக்க உள்ளார். ஒட்டுமொத்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாணவர்களில் ஹரிஹரனும் ஒருவர் ஆவார். இவர்கள் அனைவரும் ஜப்பானில் நடக்கவுள்ள ஜப்பான்-ஆசியா யூத் எக்ஸ்சேன்ஞ் திட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஜப்பானிய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்து செல்லப்படுவர்.!
ஜப்பானிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளில் ஆசிய இளைஞர்களின் ஆர்வத்தை உயர்த்துவதற்கான ஒரு திட்டம் தான் இந்த - ஜப்பான்-ஆசியா யூத் எக்ஸ்சேன்ஞ் ப்ரோகிராம். வருகிற மே 12 தொடங்கி மே 19 வரை நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் தான், கரூரில் உள்ள வெள்ளியணை அரசாங்க பள்ளி மாணவரான ஹரிஹரன் கலந்துகொள்ள உள்ளார். நிகழ்த்தியின் ஒரு பகுதியாக ஹரிஹரன் உட்பட மொத்தம் ஆறு மாணவர்கள், ஜப்பானிய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்ககளுக்கு அழைத்து செல்லப்படுவர்
ஆறாம் வகுப்பு படிக்கும் போதே இதெல்லாம் தொடங்கிவிட்டது.!
ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஹரிஹரன், பிளஸ் 2 பரீட்சையை எழுதிவிட்டு, முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு ஆராய்ச்சியாளராக உருவாக விரும்பும் ஹரிஹரன், டாக்டர் ஆக வேண்டும் என்கிற கனவுகளையும் வளர்க்கிறார், மேலும் நீட் பரீட்சைக்கும் தயார் செய்கிறார். ஆனால், இதெல்லாம் சமீபத்தில் கிளம்பிய ஆர்வங்கள் இல்லை, ஆறாம் வகுப்பு படிக்கும் போதே இதெல்லாம் தொடங்கிவிட்டது என்கிறார் ஹரிஹரன்.
முதலில் மறுக்கப்பட்டது.!
'எனக்கு ஒரு 11 வயது இருக்கும் போது, அந்த காலகட்டத்தில் மிகவும் விவாதிக்கப்பட்ட அணுசக்தி எரிபொருள் மற்றும் அதன் மறுசுழற்சிக்கான சரியான தீர்வை உண்டாக்க விரும்பினேன். இருப்பினும், எனது தீர்வானது, அது நடைமுறைக்கு அப்பாற்பட்டது என்று மறுக்கப்பட்டது. பின்னர் சுற்றுச்சூழல் சீரழிவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான சாத்தியமான தீர்வுகளை வழங்கினேன். அதாவது தோல் பதனிடும் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் க்ரோமியம் கழிவுகளை எப்படி கையாளுவது என்பது சார்ந்த சரியான திட்டமொன்றை வகுத்தேன்' என்று ஆர்வம் ததும்ப கூறும் ஹரிஹரனுக்கு கிடைத்த முதல் அங்கீகாரங்கள் பல.!
யூனியன் கவர்ன்மென்டின் இளம் விஞ்ஞானி விருது.!
இதுவரையிலாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் 'இன்ஸ்பையர்' விருதை, (Innovation in Science Pursuit for Inspired Research) மொத்தம் இரண்டு முறை ஹரிஹரன் பெற்றுள்ளார். மேலும் ஹரிஹரனின், எகோலாஜிக்கல் சானிடேஷன் கம்போஸ்ட் டாய்லெட் (ecological sanitation compost toilet) திட்டத்திற்கு, யூனியன் கவர்ன்மென்டின் 'இளம் விஞ்ஞானி விருது' கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் சேர்ந்து தான், ஹரிஹரனை ஜப்பான் கொண்டு செல்கிறது. இந்த இடத்தில் ஹரிஹரனுக்கு பக்கபலமாக, ஒரு வழிகாட்டியாக திகழும் ஆசிரியர் பி.தனபால் அவர்களையும் நாம் பாராட்ட கடமை பட்டுள்ளோம்.!






No comments:
Post a Comment