எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சத்துணவு மையங்களில் பணி : காலியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கு சிக்கல்

Thursday, January 10, 2019




அரசின் புதிய உத்தரவால், பல மாவட்டங்களில், சத்துணவு மையங்களில் காலியிடங்கள் இல்லாமல் போனது. இதனால், எட்டு மாவட்டங்களில், காலியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடவடிக்கைசிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, துாத்துக்குடி உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களில், ஆளும் கட்சியினர் நெருக்கடியால், சத்துணவு மையங்களில், காலி பணியிடங்களை நிரப்புவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.தற்போது, 25 மாணவர்களுக்கும் குறைவான, 8,000த்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களை மூட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.குறைவான மாணவர்கள்அம்மையங்களில் பணிபுரியும் உதவியாளர்கள் தவிர, அமைப்பாளர், சமையலர்கள் பணிநிரவல் செய்யப்படுவதால், பல மாவட்டங்களில், காலியிடங்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, 'புதிய நியமனம் கூடாது' என, தெரிவிக்கப்பட்டது. இதனால், எட்டு மாவட்டங்களில், விண்ணப்பித்தோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏற்கனவே காலியிடமாக அறிவிக்கப்பட்ட சில பள்ளிகளில், 25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர். 'இதனால், அந்த மையங்கள் மூடும் நிலையில் உள்ளன. அதேபோல், காலியிடங்களில் உபரி பணியாளர்களை பணி நிரவல் செய்வதால். அமைப்பாளர், சமையலரை புதிதாக நியமிக்க முடியாது' என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One