எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News : போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

Thursday, January 24, 2019


வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு 17 பி பிரிவின் கீழ் பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. 

காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய ஓய்வு ஊதிய திட்டம், ஊதிய முரண்பாடுகள், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான  ஊதியம், தொகுப்பு ஊதிய பணியாளர்களை நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கட்ட  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 


இதுவரை ஜாக்டோ-ஜியோ சார்பில் முன்வைக்கப்பட்ட  7 அம்ச கோரிக்கைகளுடன், தற்போது, 3500 தொடக்கப்ப பள்ளிகளை உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கை, 3500 சத்துணவு மைங்களை மூடும் அரசின் முடிவை  கைவிட வேண்டும் என்றும், அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கி அதில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ற இரண்டு  கோரிக்கைகளையும் இணைத்து 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்திருந்தது.

தமிழக அரசு எச்சரிக்கை

இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என்றும் விடுப்பு இல்லை என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. எனினும் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இன்று 3 வது நாளாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறது.


வேலைநிறுத்தத்தால் மாணவர்களின் கல்வி  கேள்விக்குறி

ஆசிரியர்கள் போராட்டத்தால் 80 சதவீதம் அரசு பள்ளிகள் மூடப்பட்டன. விழுப்புரம், கடலூர், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனிடையே பள்ளிகளை மூடிவிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் மட்டுமே பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு

இதற்கிடையில் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் நேற்று தடைவிதித்தது. 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் கூடி ஆலோசனை நடத்தியது . இந்த கூட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஆணை

இதனிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு 17 பி பிரிவின் கீழ் பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் 3வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக உரிய விளக்கம் தர பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. ரூ.7,000 தொகுப்பு ஊதியத்திற்கு ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One