எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு

Thursday, February 21, 2019




விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கு, வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இடம் ஒதுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.'அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, வேலைவாய்ப்பில், 2 சதவீதம் இட ஒதுக்கப்படும்' என, 2018 சுதந்திர தின உரையின்போது, தமிழக முதல்வர்,இ.பி.எஸ்., அறிவித்தார்.'ஒதுக்கீட்டை, 3 சதவீதமாக உயர்த்த வேண்டும்' என, விளையாட்டு வீரர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை, தமிழக அரசு ஏற்றது.இதையடுத்து, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கு, அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One